பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பாலா குழந்தையின் கைகளை வெடுக்' கென்று பற்றி இழுத்தாள்...

o HF F. F. # E.

இடியற்தலும் வந்துவிட்டது. அது எழுப் பும் இன்ப போதையில் எல்லோருமே மயங்கிக் கிடந்தனர். பாலா முணுமுணுத் தாள்: "ஆம், அவர் பட்ட மரமாகத்தான்் நின்று விட்டார். ஜக்கு வளர்ந்த பிறகு அவரிடம் ஒட்டவா போகிருன் ? பாசமென் பது ஒருவரை யொருவர் சார்ந்து நின்று உண்டாவது தான்ே!"

பாலா எப்பொழுது தூங்கிளுளோ... விழித்துப் பார்க்கும்போது ஜக்கு ஆசிரம விதிகளின்படி குளித்துவிட்டு, வேறு உடை அணிந்து அவள் பக்கத்தில் வந்து உட் கார்ந்திருந்தான்்.

'ஏண்டா, எப்பொழுது எழுந்தாய் நீ ? என்னை எழுப்பக் கூடாதோ ?"

அன்புடன் மகனின் கன்னத்தை வருடி ள்ை பாலா. குழந்தை முகத்தைச் சுணக் கிக்கொண்டு பின்னல் நகர்ந்தான்்.

"அம்மா, உன் கை ஏனம்மா இப்படி 'சுள்ளென்று குத்துகிறது? எங்க டீச்சரின் கை மெத்து மெத்தென்று.."

அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை.

அமுதசுரபி

பாலா தன்னிடமிருக்கும் குறைம்ை. உணராத நிலையில் நேற்றுவரை இருந் தாள்..இன்று அந்த உண்மை தெளிந்த வானம் போல் அவள் உள்ளத்தில் பளிச் சிட்டது.

கணவனிடம் அன்பை எதிர்பார்த்து உரி மைப் போராட்டம் நடத்திய அவள், அவனு டைய நிலையைப் பற்றி யோசிக்கவேயில்லை. அவள் எதிரே பட்ட மரம் ஒன்று ஹோ' வென்று நின்று கொண்டிருந்தது.

'எனக்கு ஜக்கு இருக்கிருன் ஆறுதலுக்கு: அவருக்கு...? பாலா விருட்டென்று எழுந் தாள.

அன்று முதன் முதலாக-கடைசியாக வும்.கணவனுக்கு ஒரு கடிதம் எழுதினுள்.

“தாங்கள் இனிப் பட்டமரமாக இருக்க வேண்டாம். தங்களுக்குப் பிடித்தமான ஒரு மனைவியைத் தேடிக் கொள்ளுங்கள்; எனக்கென்று தாங்கள் அளித்த தளிர் ஒன்று - அதுதான்் ஜக்கு- இன்று தங்கள் பட்டுப்போன வாழ்க்கையை எனக்கு நினைவு படுத்திவிட்டான்...... || ||

ஆசிரமத்தின் பிரார்த்தனைக் கூடத்தில் காலை மணி ஒலித்தது. ஜக்குவின் தளிர் விரல்களைப் பற்றிக்கொண்டு நடந்தாள் LJITEJIT. -ն