பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"குழந்தையா அது? என் வயிற்றில் நெருப்பை அள்ளிப் போட்ட எமன்' என்ருள் பாட்டி பார்வதியம்மாள்.

"இருபது வயது வளர்த்த மகளே நொடி யில் போய் விட்டாள். இதுதான்் தங்கப் போகிறதாக்கும்' என்றார் தாத்தா.

"என் மைதிலியை என்னிடமிருந்து பிரித்த சனியன். அது எக்கேடு கெட்டாவது தொலை யட்டும் !" என்று கூறிவிட்டு ராமச்சந்திரன் விரக்தியுடன் தில்லிக்குப் போய் விட்டான்.

உலகத்திலே அனுப்பப்படும் ஜீவனேக் காப் பாற்ற சர்வாந்தர்யாமியாக ஒருவன் இருக் கிருன் என்பதை மனித அறிவு மறந்துவிடு கிறது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட அந்தச் சிசுவை வளர்க்க விஷ்ணுகரே என்கிற மராட்டியர் ஒருவரும் அவர் மனைவி கிரிஜா பாயும் முன் வந்தார்கள். முதலில் டாக்டர் குலாப் ஆட்சேபணை செய்தாள். குழந்தை யின் சொந்தக்காரர்கள் வந்து கேட்டால் அவர்களிடம் குழந்தையை ஒப்புவித்துவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். குழந்தையின் சொந்தக்காரரின் விலாசம் வேறு கிரிஜாபாயிடம் கொடுத்தாள்.

குழந்தை வேண்டும் என்று தவமிருந்த கிரிஜாபாய்க்குக் குழந்தை கிடைக்கவே, குருடனுக்குக் கண்கிடைத்த மாதிரிஇருந்தது. விஷ்ணுகரே கண்யமான மனிதர். குழந்தை யின் தாத்தாவைத் தேடிப் போய்க் குழந்தை தம்மிடம் இருப்பதாகக் கூறிஞர். அளவுக்கு மீறிய துயரத்தை அளித்த ஆண்டவன் அதை மறக்க ஒரு சிசுவைக் కొత్థ அறிந்து குழந்தையை ஏற்றுக் காள்ள வேண்டிஞர்.

மகளின் பிரிவால் சித்தம் சரியில்லாமல் இருந்த பார்வதியம்மாள் ஒரேயடியாக மறுத்தாள். அவள் மனத்தில் சூன்யம் குடி கொண்டு விட்டது.

அது பாலேவனமாகிவிட்டது. பாலேவனத் தில் நீர் தெளித்த மாதிரி கரேயின் வார்த்தை கள் எடுபடாமல் போயின. இனி, பகவான் ஒருவனுல்தான்் பாலைவனத்தைப் பசுஞ் சோலை யாக மாற்ற முடியும் என்று தீர்மானித்துக் கரே வீடு திரும்பிஞர். குழந்தை பிறந்த வுடன் எல்லோராலும் ரஸ்கரிக்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டதால் அதற்குச் 'சகுந்தலா" என்று பெயர் வைத்தார்; தாமே கண்வராகவும் மாறிஞர் கரே.

பார்வதி தம்பதிகள் கான்பூருக்கே ஒரு முழுக்குப் போட்டுவிட்டுத் தஞ்சைக்கு வந்து சர்ந்த்ார்கள். இனி யாருக்காக மைதிலி யின் தகப்பளுர் உத்தியோகம் பார்க்க வேண் டும்? எல்லாம்தான்் முடிந்து விட்டதே !

Yk

காலத்துக்குத்தான்் எவ்வளவு வேகம் ! மைதிலியின் பெற்ருேர் கான்பூரை விட்டுக் கிளம்பும்பொழுது கார்த்திகை மாதம். அதற்குள் தைப்பொங்கல் வந்து சித்திரை வருஷப் பிறப்பும் ஆகிவிட்டது. பண்டிகை களும் பருவங்களும் மாறி மாறி வந்து போயின. இலை உதிர்ந்து காய்ந்த கம்பாய் நின்ற மரம் தளிர் விட்டுப் பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பழங்களைச் சிந்தின. ஓயாமல்

ராணிப்பேட்டை கே. வி. ராகவனின் புதல்வி யும், பத்தக்குடி ராமஸ்வாமியின் மாணவியு மான குமாரி ஹேமமாலினியின் நடன அரங் கேற்றம் சமீபத்தில் சென் அன, மியூனியம் தியேட்டரில் சிறப்பாகக் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தக்லமையில் நடைபெற்றது. பேராசிரியர் பூ பி. சாம்பமூர்த்தி அவர்கள் ஹேமமாலினியைப் பாராட்டிப் பேசிஞர்.

ஒழியாமல் இயற்கை தன் வேலையைச் செய்து கொண்டே போயிற்று. பார்வதி அம்மாளுக் கும் அவள் கணவருக்கும் உலக வாழ்க்கை முதலில் சூன்யமாகத்தான்் இ ரு ந் த து, காய்ந்த மரத்தைப் போல. பிறகு படிப்படி யாக மனத்தில் ஆசைகளும் விருப்பங்களும் எழ ஆரம்பித்தன. பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்ட பிறகு மனத்தில் சுட்ட புண் ஆறித்தான்ே போயிருக்கும் !

ஆம் மைதிலி இறந்து போய்ப் பதினைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் பதினேந்து வருஷ காலத்தில் சில சமயங்களில் கான்பூரில் கரேயின் குடும்பத்தில் விட்டு வந்த தங்கள் பேத்தியை நினைத்துப்பேசிக் கொண்டார்கள். ஒரு மாதம் கூட நிரம்பாத குழந்தையை விட்டு வந்த்வர்கள் சாவகாசமாகக் முந் தைக்கு நான்கைந்து வருஷங்கள் கழித்த

பிறகு மனச்சங்கடம் ஆறி அதைப்பற்றி நினைத்தார்கள். எ ழு தி விசாரிக்கலாமா என்றும் யோசித்தார்கள். கான்பூரிலிருந்து

தஞ்சைக்கு வந்திருந்த தென்னிந்தியக் குடும் பத்தினர் ஒருவரைச் சந்தித்து விசாரித்தும் பார்த்தார்கள்.

' கரேயா அவரை எங்கோ சிம்லாவுக்கு மாற்றி விட்டார்களாமே ! அவர் ஊரை விட்டுப் போய் இரண்டு வருஷங்களுக்கு மேல் ஆகி விட்டதே ' என்று அவர்கள் தகவல் தெரிவித்த பிறகு, இருவருடைய ஆசையும் நசித்து விட்டது. "நம் வயிற்றில் பிறந்தது ஒன்றுதான்், அதுதான்் போய் விட்டதே ' என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள்.

அங்கே தில்லியில் ராமச்சந்திரன் மறுமணம் செய்து கொள்ளவேயில்லை. பெயருக்கேற்ப ஏகபத்தினி விரதனுகவே யிருந்து விட்டான்.