பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைதிலியின் உருவம் அவன் மனத்தில் பதிந்து போயிருந்தது. புறத்தில் அவன் வேறொருத் தியை மணந்து போலி வாழ்க்கை வாழ ஆசைப்படவில்லை. ஆனால், அவன் மனத்துள் அவன் மைதிலிக்கு ஏதோ தீங்கு இழைத்து விட்டதாகவே கருதினன். இறந்தவளின் ஆத்மா சாந்தியடைந்திருக்குமா என்று ஏங்கி ஞன். மனைவியின் உயிரற்ற உடலுக்கருகில் ட்ாக்டர் குலாபின் வீட்டில் வீல் வீல்" என்று அழுது கொண்டிருந்த சிசுவின் முகம் அவ னுக்கு இலேசாக நினைவு வரும். ஆந்தக் குழந்தை-ஒரு வேளை அதுவும் போய் விட்டதோ என்னமோ என்று நினைத்துக் கொண்டான். மனைவி ஒருத்தியால்தான்் கண வனின் வாழ்க்கை பூர்த்தியடைகிறது என்று நம்பி வந்த அவனுடைய உள்ளத்தில் ஆட்டம் கண்டது. -

நாற்பது வயதுக்கு மேல் குழந்தைகளின் பேச்சும் இன்சொல்லும் மனைவியின் அன்பை விட ஆறுதலளிக்க முடியும் என்று நினைத்த போது, அவனுடைய உள்ளம் தன் ஒரே குழந்தைக்காக ஏங்கியது.

விஷ்ணு கரேயின் குடும்பத்தில் தான்் எத் தகைய மலர்ச்சி? ஒரு மகவுக்காகத் தவமிருந்த கிரிஜாபாய்க்கு, சகுந்தலா கிடைத்த பிறகு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

X.

அன்று கார்த்திகைத் திருநாள். தஞ்சை யில் இருந்த பார்வதி அம்மாள் இரண்டு அகல் விளக்குகளைக் கொண்டு வந்து வாசல் பிறையில் வைத்து விட்டு உள்ளே போகத் திரும்பினள். திண்ணையில் உட்கார்ந்திருந்த அவள் கணவர் அவளே அழைத்தார்.

"இன்னும் நாலு விளக்குகள் ஏற்றி வைக் கக் கூடாதா?' என்று கேட்டார் அவர்.

"வைக்க வேண்டியதுதான்்! என் குடும்ப விளக்கை அணேத்த கடவுளுக்கு நாலு என்ன, லக்ஷதீபம் கூட ஏற்றத்தான்் வேண்டும்!" என்ருள் பார்வதி அம்மாள். சுருங்கிய அவள் கன்னங்களில் கண்ணிர் தாரை தாரையாகப்

பெருகி வழிந்தது.

"பொரி உருண்டை வேண்டுமென்று

அடம் பிடித்தீர்கள். பிடித்து வைத்திருக்

கிறேன். தின்னுங்கள். பேரனும் பேத்தியும்

குதி போட வேண்டிய வீட்டில் கிழம்தான்ே துள்ளி விளையாட வேண்டும்!'

கிழவர் அழவில்லை. கோபித்துக் கொள்ளவு மில்லை. சிரித்தார்.

"மூடமே! நம் குடும்ப விளக்கை பகவான் அண்ைக்க வில்லை. ஒரு பொறி நெருப்பி விருந்து லக்ஷ தீபங்களை ஏற்றுவது போல, ஒரு சிறு பொறியை - குழந்தையை - ந ம க்கு க் கொடுத்தான்். நாம்தான்் அதை அணையாமல் பாதுகாக்கத் தவறிவிட்டோம்!'" என்மூர்.

பார்வ அம்மாள் பிரமை பிடித்தவள் போல் நின்ருள். பிறகு, "வருகிறீர்களா?"

என்று கேட்டாள்.

"எங்கே?' என்று கேட்டார் கிழவர். "ஒவ்வொரு தலமாகச் சென்று கடவுளின் சன்னிதியில் விளக்கேற்றி வைப்போம்.

குழந்தை எங்கேயாவது உயிரோடு இருந் தால் பூரண ஆயுளுடன் வாழட்டும், அந்தப் புண்ணியத்தையாவது செய்வோம்' என்ருள். அடுத்தநாளே இரண்டு பேருமாகத் தல யாத்திரை கிளம்பி விட்டார்கள்.

தில்லி, ஜனதா எக்ஸ்பிரளில் ராமச்சந்தி ரன் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்்: வாழ்க்கையே கசந்து விட்டது சார் ! தலயாத்திரை போகிறேன்' என்று.

ரிாமேஸ்வரத்தில் மூன்று கடல்களும் கலக் கின்றன. பார்வதி அம்மாளும், கிழவரும் தலைப்பைச் சேர்த்து முடிந்துகொண்டு கட லில் இறங்கி ஸ்நானம் செய்தார்கள்.

ராமச்சந்திரன் கடலில் குளித்துக் கரை ஏறியவன் பல வருஷங்களுக்கு அப்புறம் தன் மாமியார் மாமனுரைச் சமுத்திரக் கரையில் கண்டான். கிழவருக்கு அடையாளம் புரிந்து கொள்ளவே தாமதமாயிற்று.

"நம்ப மாப்பிள்ளை!' என்ருள் பார்வதி. "இன்னும் யார் வந்திருக்கிருர்கள்?' என்று கேட்டார் அவர்.

"நான்தான்் மாமா, மைதிலிக்கு அப்புறம். நான் தனிமரம்! ....என்ருன் ராமச்சந்திரன் உணர்ச்சி பொங்கும் குரலில்.

மூவரும் ஒன்ருக ராம்நாதசுவாமி ஆலயத் துக்குச் சென்றார்கள். சன்னிதியில் கூட்டம் அதிகம் இல்ல்ை. ஒருபுறம் இம்மூவரும் நின் றிருந்தார்கள். மற்றொருபுறம் ஒரு வட இந்தியக் குடும்பத்தினர் நின்றிருந்தார்கள்.