பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருக்கு...?

வாயை அடக்கிக் கொண்டு இரு. உடம் பிலே சிவனைக் காணுேம்: 'பூ' என்றால் காற்றில் பறக்கிற மாதிரி இருக்கிருய், வாய் மட்டும் நெருப்பாகச் சுடுகிறது...'

ஜக்கு, தாயையும் தந்தையையும் மாறி மாறிப் பார்த்தான்். அப்பாவுக்கும் அம் மாவுக்கும் உள்ள வேற்றுமை அவனுடைய சிறிய மூளைக்குக் கூடத் தெரிந்தது. நெடி துயர்ந்து, நல்ல சிவப்பாகக் கம்பீரமாகத் தோன்றின்ை பலராமன். ஆழ்ந்து சுடர் விடும் கண்களும், சுருண்ட கேசமும் கொண்ட அவன் நல்ல அழகன். அவன் அருகில் அம்மாவை அவன் பல முறைகள் பார்த்திருக்கிருன். மூங்கிற் துண்டுகளைப் போல் நீண்ட கைகளும் கால்களும்... குழி விழுந்த கண்களுமாக அவளுடைய கோரம் அவனுக்குத் தெரிந்துதான்் இருந்தது. அவளுக்கும் அவனுக்கும் எத்துணை வேற் றுமை ? இயற்கையின் இந்த ஏமாற்று வித்தையை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியவில்லையே!

இப்படி ஓர் அபூர்வ தம்பதிக்குப் பிறந்து விட்ட தன்னையும் குனிந்து பார்த்துக் கொண்டான் ஜக்கு. தகப்பஞர் வாங்கித் தந்த ஊதலை எடுத்து உதட்டில் பொருத்தி அவள் ஊதவும், ரயிலும் ஊதிக் கொண்டு கிளம்பிவிட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றார்கள். இவர்களைச் சுற்றி எத்தனையோ விதமான பேச்சுக்கள், கருத் துக்கள்...

" ஊர் போய்ச் சேர்ந்து கடிதம் போடு. . ஆமாம்... திரும்பி வரும்போது உடம்பை தேற்றிக் கொண்டு வரவேண்டும்."

ஒருவன் ஒருத்தியிடம் இவ்விதம் கூறி

டைபெற்ருன்; ' நாலும் தான்் பெண் ளுகப் பெற்ருய்; இந்தத் தடவை மொக்கு

திரும்பிவர வேண்டும். இல்லாவிட்டால்..." இல்லாவிட்டால் என்னவாம் ? என் னைத் தள்ளி வைத்து விடுவீர்களோ ?"

இப்படி ஒரு பெண் குரல் மெல்லியதாக இழைந்து உறுதிப்பட்டு நின்றது.

பாலா திடுக்கிட்டாள். இதோ தன்னைத் தன் கணவன் தள்ளி வைத்து விட்டான். அப்படிச் சாமானியமாக நடந்து விடுமா என்று அந்தப் பெண் சவால் விடுகிருளே ! இதோ நடந்து கொண்டிருக்கிறதே!

இனி அவளுக்கும் அவனுக்கும் என்ன உறவு வைத்திருக்கிறது?

ரயில் மலைகளையும், காடுகளையும், ஆறு களையும் கடந்து முன்னேறும்போதெல் லாம் அவளுக்கு அவன் தொலைவில் தெரி

83

யும் நட்சத்திரப் புள்ளியாக மாறிவிட்டான். அதோ! அவள் கண்களை உறுத்துவதைப் பால் ஒரு வானச் சுடர். எட்டாத உயரத் தில் அது நின்று அவளை அலட்சியமாகப் பார்த்தது. அது போல் தான்் அவனும்!

க்கு புரண்டுபடுத்தான்். திரும்பவும் அவர் கள் பிரிவுக்குக் காரணத்தை ஆராய்ந் தாள் அவள். பெண்மையின் முழுமையை எதிர்பார்த்துக் காலமெல்லாம் ஏங்கி இருந்தவனுக்கு, பாலா ஒரு முழுமைப் பெண்ணுக முடியாது. ண்ட நீண்ட கை கால்களும், சதைப்பிடிப்பில்லாத கன்னங் களும், கோரைக் கூந்தலும் கொண்ட அவ ளுடைய கழுத்தில் அவன் முடிச்சிட்ட கதை விந்தையானது; வேடிக்கையானதும் கூட. உற்ருர் உறவினர் பெற்றவர் எல்லோ ருமே பலராமனைச் சந்தேகத்துடன் பார்த் தார்கள். வயது முப்பதுக்கு மேல் ஆகியும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட வில்லையே என்பது தான்் அவர்கள் குற்றச் சாட்டு. ஒழுங்காக இருப்பவன்தாகு?

இந்தக் கசமுசப் பேச்சுக்கள் பலராம னின் தாயை வெகுவாகப் பாதித்தன; காதைத் துளைத்தன.

" பாலு ! நான் சொல்வதைக் கேட் கிருயா ?' என்று மகனிடம் ஒரு தினம் ஆரம்பித்தாள் அவள்.

" என்ன அம்மா?..."

' குடும்புத்துக்குத் தகுந்த ஒரு பெண் ஞகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்..."

"நீதான்் பாரேன், அம்மா...' 'அம்மா குடும்பத்துக்கு ஏற்றவளாகத் தான்ே கேட்கிருள்: பார்க்கட்டும் என்று நினைத்தான்் பலராமன்.

தாய் அவ்விதமே பார்த்தாள். மகனின் கற்பனை உள்ளத்தைப் புரிந்துகொள்ளாத அவள் பாலாவின் உயரம் பருமன் இவற் றைப் பார்த்துத் திருப்தி அடைந்துவிட் Ц ТбТTн

பெண்ணைப் பார்த்தாயாடா பலராமா?"

"நீதான்் பார்த்தாயே, அம்மா. நான் சரி யாகக் கவனிக்கவில்லை..."

" நல்ல உயரமும் பருமனுமாக இருக் கிருள். குடும்ப வேலைகள் நன்ருகச் செய் வாளாம். . "

"ஓஹோ l-'

அவனுக்குப் பெண்ணைப் பார்த்து முடிவு கூற வேண்டுமென்று ஏளுே தோன்ற வில்லை. தாயிடம் வைத்திருந்த அபார நம் பிக்கை காரணமாக இருக்கலாம்.