பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

கண்கட்டு வித்தை போல் இவர்கள் திரு மனம் நடத்து விட்டது. மனையில் பெண் னையும், பிள்ளையையும பார்த்தவர்கள் அதி சயிததார்கள். வயதுக்கு மீறிய முதிர்ச்சி நிறைந்த மனப் பெண்ணைப் பார்த்து மறு படியும் கசமசவென்று பேசிக் கொண்டார் கள். தனித்துப் பார்க்கும்போது தெரியாத பேதங்கள் அவர்களுக்கு மணமக்களைச் சேர்த்துப் பார்க்கும்போது நன்ருகப் புலப்பட்டது. நல்லதோ கெட்டதோ, நாலு பேர்கள் பேசும் போது தான்ே கூர்ந்து கவனிக்கத் தோன்றுகிறது ?

பலராமன் மனைவியைக் கூர்ந்து கவனித் தான்். அவன் உள்ளத்தில் ஒரு சிறு நெரு டல். இவளையா மனைவி என்று வரித்துக் கொண்டோம் பொன்ஞலும் மணியாலும் அணி செய்து பெற முடியாத அழகியை யல்லவா மனக்க நினைத்திருந்தேன்!...

"ஆம் நினைத்திருந்தேன்-கற்பனையில்;

நடைமுறையில் தவறிவிட்டேன்!"

தலையைக் குனிந்து விழிக்கடையில் கோத்து நின்ற கண்ணிரைச் சுண்டி

எறிந்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்

கொண்டான் அவன்.

முதல் பார்வையில் ஏற்பட்ட அந்தக் கலக் கம், கல் மேல் பொறித்த சொல் போல் அவன் இதயத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது.

ID'êo யில் படுத்திருந்த நாய் உடலைச் சவிர்ததுக் கொண்டது. பாலா புரண்டு படுத்து ஜக்குவின் கைகளை எடுத்துத் தன் மார்பின் மீது வைத்துக் கொண்டாள். குழந்தை எல்லாச் சாயலிலும் தகப்பனேயே உரித்துக் கொண்டு வந்திருந்தான்். அவன் குவிந்த உதடுகளைப பார்த்து அவரும் இப்படித்தான்் இருப்பார்' என்று நினைத்

துக் கொண்டாள் அவள்...

அசித் முடியாத எண்ணங்கள் திரும்பவும்

தொடர்ந்தன... பாலர் கணவன் வீட்டிற்கு வந்தாள்.

ஆனால் அவனைக் கவரவில்லை. முகத்தில் ஒற்றிய பவுடரும், கண்களில் தீட்டிய மையு மாக அவள் அவனை மாலை நேரத்தில் வர வேற்ாள். அஞ்சனமும், வாசனைப் பொடி யும் பெண்ணின் வெளி அழகைச் கவர்ச்சி யாக்கிக் காட்டுமே தவிர, பெண்ணின் மலர்ச்சியை அவற்ருல் அதிகப்படுத்தி விட முடியாது.

பாலா, நாடகத்தில் பெண் வேடம் தாங்கிய நடிகனைப் போலத் தோன்றி ஞள். அவனுக்குக் கோ பம் பற்றிக் கொண்டு வந்தது.

அமுதசுரபி

"இங்கே வா, பாலா! நீ இப்படி வேஷம் போடடுக் கொண்டு நின்றால் நான் மயங்

விடுவேன் என்று நினைக்காதே. நீ பெண் குகத் தவறிப் பிறந்துவிட்டாய். உன்னி டம் பெண்ணுக்கு இருக்க வேண்டிய

மென்மை இல்லை; குழைவு இல்லை; கவர்ச்சி யுமில்லை ! நீ எப்பொழுதும்போல் சாதார ணமாகவே இரு. அது போதும்...என்னை பயமுறுத்தாதே..."

பாலாவுக்கு அவன் கூறுவது புரியவில்லை. இந்த நிலையில்தான்் ஜக்கு பிறந்தான்்!

'உன் பிள்ளை உன்னைப் போலவே இருக் கிருளடா...அவளைக் கொள்ளவில்லை...' என்ருள் தாய்,

'பிழைத்தேன் போ......உனக்குக்கூட அவள் பெண்ணுக இல்லை என்று இப்பொழு தாவது புரிந்ததே..."

"பெண் பார்க்கப் போன அன்று நீயும் தான்ே வந்தாய் அம்மா; என்னைப் போய்க் குற்றம் சொல்கிருயே!'

தாய் வேதனையுடன் மகனின் முகத்தைப் பார்த்தாள்.

"ஆம். வந்தேன்; அவளைப் பார்க்கவும் பார்த்தேன். என் கண்ணுக் கெதிரே ஏதோ திரையைத் தொங்கவிட்ட மாதிரி அவளுடைய அவலட்சணம் எனக்குத் தெரி யாமல் போய்விட்டது, அம்மா...'

துன்பப் பெருமூச்செறிந்தான்் அவன். 'திருமணங்கள் வானுலகிலேயே தீர் மானிககப் படுகின்றன" என்று அல்லவா கூறுகிருர்கள். இறைவன் இ வ. ர் க ள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்துச் கசப்பை வளர்த்து வேடிக்கை பார்த்தான்். "என்னவோ குடித்தனப் பாங்காக இருக் கிருளே என்று பார்த்தேன்...உயரமும் ப்ரு மனுமாக எப்படி இருந்தாள் ? பிசமாத அழகியில்லாவிடினும் உடம்பாவது நன்ருக இருக்கக் கூடாதா?...அவலட்சணம் அதிக மாகக் கண் ணுக்குத் தெரியாது...'

தாய் அங்கலாய்த்தாள். கணவனின் அன்பு கிட்டாமல் போன வுடன் பாலா எலும்பும் தோலுமாக ஆகி வந்தாள். எக்ஸ்-ரே கருவிகள் உடலைப் படம் பிடித்தனவே தவிர, உள்ளத்தில் பொங்கும் தணியாத ஆசையைப் படம் பிடித்துக் காட்டவில்லை.

மாமியாரும் கணவனும் அக்கறையுடன் வாங்கித் தந்த புஷ்டியான ஆகாரங்கள் அவளை வளப்படுத்தவில்லை.

அன்பு - அன்பு! -ஆது ஒன்றுதான்் அவள் இதய ஒலமாக இருந்தது. தாய் மைப் பேற்றை அடைந்தபோது கூட அவளிடம் மாறுதல் ஏற்படவில்லை.

-