பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மாலைப் பொழுது நீண்டுகொண்டே வந் தது. சுவர்க் கடிகாரம் ராகம் போட்டுப் பாடி

நான்கு அடித்து ஒய்ந்தது. சமையற்கார ராமன் ஒவல் கரைத்துக் கொண்டு வைத்த வன், "இரவுச் சாப்பாட்டுக்கு...' என்று தலையைச் சொறிந்தவாறு கேட்டான்.

'ஒன்றும் வேண்டாம் போ. அண்ணுவோ ஊரில் இல்லை. சூடாக ஒரு டம்ளர் பால் கொடு, போதும். உனக்குத் தேவையாளுல் சமைத்துக் கொள்' என்றேன்.

இதே சமயம் போன் மணி அடித்தது. யாராக இருக்கும் கெளசல்யாவாக இருக் குமோ? இரண்டு மூன்று நாட்களாக அவள் என்னிடம் பேசவேயில்லையே! ரிசீவரை எடுத் துக் குரல் கொடுத்தேன்.

"ஹலோ...' "ஹலோ! நான்தான்் பாஸ்கர் பேசு கிறேன். நானும் கெளசல்யாவும் உங்களுடன் முக்கியமான விஷயம் பற்றிப் பேச இரவு ஏழரை மணிக்கு வருகிருேம்...'

'அவளுக்குப் பேச ஒழிவில்லையாக்கும்?" 'அதெல்லாம் இல்லை. அதுதான்் நேரவே வருகிருேமே!'

"டொக்" கென்ற சத்தத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இரவு ஏழரை ம ணி க் கு வந்தால் .ெ க | ச ல் ப ா சாப்பிட்டு விட்டுத்தான்் போவாள். எந்த நேரத்தில் வந்தாலும் அவளுக்கு அடுப்பங்கரை ஆராய்ச்சிதான்். ஆவக்காய் ஊறுகாய்ச் சாதமும், வடகமும் பொரித்துப் போட்டாக வேண்டும். பெரிய சாப்பாட்டுராமி அவள்!

வாசல் தாழ்வாரத்தில் தெரிந்தது.

"ராமா!' என்று அழைத்தேன்.

ராமனின் தலை

பவ்யமான தோற்றத்துடன் இடுப்பில் வரிந்து கட்டிய துண்ட்ோடு ராமன் எதிரில்

"ராமா! கெளசல்யாவும், பாஸ்கரும் வரு கிருர்கள். உனக்கு வடித்துக் கொள்வ்தோடு

கூடக் காஞ்சம் சாதம் வடித்துவிடு, போதும் !'

'அதற்கென்னம்மா, சமையல் செய்வ தற்கே நேரம் இருக்கிறது. ஒரு சாம்பார்

வைத்து, உருளைக் கிழங்கு பொடிமாஸ் செய் தால் யிற்று...' ப்படிச் சொல்லிக் డ: TrrLpgä7 .கீ. குே: அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் சமைய லறையிலிருந்து வெங்காய மணம் வீசியது. ராமனுக்கு விருந்தினர் வருகிருர்கள் என்றால் ஒரே உற்சாகம்.

சரியாக ஏ ழரை மணிக்கு வாசலில் கார் வந்து நின்றது. பாஸ்கரின் பக்கத்தில் உட் கார்ந்திருந்த கெளசல்யா முன்புறம் சரிந்து

'விழுந்த பின்னலைப் பின்னுல் தள்ளியபடி

வெளியே வந்தாள். காரின் பின்புறத்தி விருந்து குழந்தைகள் இறங்கினுர்கள்.

இறங்கியவர்கள் தங்கள் பெற்ருேரைப் பின்தங்க வைத்துவிட்டுப் புல்தரையில் குதித்தோடி வந்து ' ஆன்ட்டி' என்று கூவியவாறு என் அருகில் வந்து நின்றார்கள். கெளசல்யாவுக்கு முத்தவன் மகன். குமார் என்று பெயர். என் கழுத்தைச் சுற்றி வளைத்தவாறு என்ன நெருக்கினுன் ப்ெண் னின் பெயர் பத்மா. அவள்எேன் மடிமீது ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

"ஹலோ, சுமித்திரா! உன்னுடைய தனி மையை, சிந்தனைகளை யெல்லாம் கலேக்க நாங்கள் வந்துவிட்டோம். அடடா இந்த வால்கள் என்ன இப்படித் தலைமேல் ஒன்றும் மடிமேல் ஒன்றும்ாக ஏறிக் கொண்டிருக் கின்றன . ஹாம்...' பாஸ்கர் புன்முறுவ