பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


ஒரு பத்து ரூபா எடுத்துக்க வேண்டியதுதான். எடுத்துக் கத்தான் போறேன். யாரு நம்மைக் கேக்கறது ?

  • கேட்க உரிமையிருந்தவளே என்னே வாயைத் திறந்து கேட்டதில்லை! அட அவள் போய் மூன்று வருஷமாயி டுத்தா ? நாளேத்தானே பெளர்ணமி ? இன்னும் இரண்டு நாளிலே திதிகூட வந்திடுமே ! இந்தத் தடவை அவ மனசு குளிர நல்லாவே ஏதாவது செய்யனும். அவ மனசு குளிர்ந் தாத்தான் இங்கே இருக்கிறவங்க நல்லா வாழலாம். குடும்ப நன்மைக்காகவாவது அந்தப் பத்து ரூபா செலவு செய்து தான் ஆகணும்.

" அப்படி இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தா, கையில் இருக்கிற ரூபாய் அத்தனைக்கு மல்லவா செலவு வருகிறது அட, அப்படி வந்தாத் தான் என்ன ? இத்தனை நாள் சம்பாதிச்சுக் கடன்காரன் மடியிலே கொட்டியாச்சு. இந்தத் தடவை வாயிதா தள்ளிப்போட்டானே புண்ணிய வான். இந்த ரூபாயை நமக்காகவும், நம்ம குடும்பத்துக் காகவும்தான் செலவழிச்சிடுவமே ! செலவும், செலவழிக்கிற ஆசையும் பி மாதமாய்த்தானிருக்கு. யோசித்துக் கொண்டே வந்த சிவசங்கு, சைனு பஜாரில் அந்தப் பெட்டிக் கடை வாசலில் நின்று வெறித் துப் பார்த் தார். கோட் பையைத் தடவிப் பார்த்தார். சம்பளத்தில் முக்கால் பகுதி-நியாயமான பிடித்தங்கள் போக மீதி-அப் படியே அங்கே இருந்தது. பர்சைக் கையிலெடுத்தார். காசை எடுத்து அலட்சியமாக வீசி ஒரு சிகரெட் வாங்கினர். பரம்பரையாக சிகரெட் பிடிக்கும் பாணியில், வலக்கையால் சிகரெட்டைப் பிடித்து, இடக்கை உள்ளங்கையில் வைத்து நாசூக்காகத் தட்டினர். சிறிது நேரம் கையில் வைத்து உருட்டினர். பின்னர் அதைப் பற்ற வைத்துக் கொண்டு, ஒய்யாரமாக சைனுபஜார் கும்பலில் நெளிந்து, புகுந்து ஹைகோர்ட் கடற்கரையை நோக்கி நடந்தார். வெண் மணலில் உட்கார்ந்து கொண்டதும், பழையபடி அவரது பிரச்னைகள் பெரும் பூதங்களாக அவர் மனக் கண் முன் தாண்டவமாடத் தொடங்கின.