பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.37 பண மில்லாத போதுதான் இந்த எழவு பிரச்னைகள் தொல்லே கொடுத்தன. பணம் கையில் வந்தும், எப்படிச் செலவு செய்வதென்று மறுபடியும் குழப்பமா ? நல்ல வேடிக் கையடா. இது !’ எதிரே பால்கோவா விற்றுக் கொண்டு ஒருவன் வந்து கொண்டிருந்தான். பழையபடி சிவசங்கு சிந்தனையில் லயித்தார். வீட்டில் தகப்பனில்லாத அந்தக் குழந்தை ஒன்று மூன்று நான்கு வருஷமாய் இருக்கிறதே ! ஒரு நாளாவது அதன் கையிலே இந்தா என்று ஒரு இனிப்புப் பண்டம் வாங்கித் தந்திருக்கிருேமா? ஒவ்வொரு வேளைச் சாப்பாடும் தான் விருந்துபட்ட பாடு படுகிறது. அதுவுமில்லாமல் வீட்டிலே இனிக்கப் பேசி எத்தனையோ நாளாயிட்டுதே ! திங்கறது எங்கே ? பாவம், குழந்தை. நம்ம கஷ் - த்துக்காக அதுக்கு ஒன்றும் செய்யாமலிருந்தோமே. சே ! இன்றைக்கு இரண்டு பொட்டலமாவது வாங்கி விடுவது. சம்பளப் பணத்திலே நம்ம செலவில் முதற் செலவுதான் இப்படி ஒரு நல்ல செலவா யிருக்கட்டுமே!’ செலவுப் பிரச்னையைச் சமாளிக்க சுபமான ஆரம்பம் செய்யும் திருப்தியுடன், மனநிறைவுடன் கோட் பைக்குள் கைவிட்டார் சிவசங்கு. கையை அவர் வெளியே எடுக்கவே யில்லே. கையை வெளியே எடுத்தால், பர்ஸ் பையில்-அது இருந்த இடத்தில்-இல்லை என்ற பயங்கரத்தைக் கண்ணுல் பார்க்க வேண்டி யிருக்குமே ! சமுத்திரத்தில் நான் சிந்திய கண்ணிர் எங்கே என்று தேட முடியுமா? இடிந்துபோய் நின்ற சிவசங்குவுக்கு என்ன செய்வது, என்ன கேட்பது என்று எதுவும் புரியவேயில்லை. மயக்கம் வந்த நிலையில் மணலில் படுத்து விட்டார் ! இனி அவருக்குக் கவலையில்லே. பணத்தை எப்படிச் செலவு செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்த அவசிய மில்லாமல் சைணு பஜாரிலேயே ஒரு தேர்ந்த கரம் சிவசங்குவின் பிரச்னைகளை ஒரு தினுசாகத் தீர்த்து விட்டது!