பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 47 இப்போது அவள் உள்ளத்தில் ஓயாமல் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. கதிர்வேலு : பார்த்து எத்தனை வருஷங்கள் ஆயின? பத்து வருஷங்கள் ! எப்படி இருக்கிருனே ? உடற் கட்டும் வனப்பும் கொண்ட வாலிபன் ஒருவனேக் கற்பனை செய்து பார்த்தாள் செல்லி. கதிர்வேலு எங்காவது வேலையில் இருப்பான். கல்யாணம் கூடக் கட்டிப்பான். அப்புறம் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தைகள் பிறக்கும். அவளுடைய பேரப் பிள்ளைகள், ஆயா என்று அவள் தோள்களிலும், மடியிலும் விழுந்து புரளவேண்டிய குழந்தைகள். ஆணுல், இந்த அறிவு, சிந்திக்கும் திறன் அப்பொழுது எங்கே போயிற்று ? உடம்பிலே தெம்பிருந்தது; உலகத்தை எதிர்த்துக் கொண்டு புறப்பட்டு விட்டாள் அன்று.

  • அவன் மேலும்தான் தப்பு. ஒரு நாளாவது அவன் என்னை அம்மான்னு ஆசையாக் கூப்பிட்டிருப்பாளு ? கூடப் பொறந்தவனேக் காணுமக் கரிச்சுக் கொட்டினன். அவன் போனப்புறம் என்னைக் கண்டா ஆகலை. அன்பு ஒட்ட வேண்டிய வயசிலே ஒட்டவில்லை.”

வாயில் இருந்த வெற்றிலைச் சக்கையைத் துரவென்று துப்பிவிட்டுச் சாலையைப் பார்த்தாள். சாலை ஒரம் ஜீப்பு வண்டி ஒன்று வந்து நின்றது. அவள் வேலை செய்து வந்த ஐயரும் அந்த வீட்டு அம்மாளும் வண்டியை விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள். எதிர்பாராத சந்திப்புதான்! " செல்லியாடி?’ என்று கேட்டாள் அந்த அம்மாள். நீங்களா அம்மா?’ என்று குமுறிக் குமுறி அழுதாள் செல்லி. பத்து வருஷங்களில் தேக்கி வைத்திருந்த துயரமனத் தும் கரைந்து போவது போல் கண்ணிர் பெருகியது.