பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149


பாட்டுக்கு குத்தி இருப்பேன். இனிமே உன் சங்காத்தமே வேணும்...' என்று ராசப்பனிடம் கூறி, அந்தப் புதியவளி டம் அவனே ஒப்படைத்து விட்டாள். ராசப்பன் ஏதோ ஒரு நியாயத்துக்கும், ஆணைக்கும் கட்டுப்பட்டவனேப் போல் செல்லியை அனுதாபத்துடன் கவனித்துக் கொண் டான். அறத்துக்குப் புறம்பாக அமைந்துவிட்ட அவர்கள் வாழ்க்கையில், மனிதப் பண்புகள் காணப்பட்டன. ஒரு நாள் சாலையில் வந்து நின்ற பஸ்ஸிலிருந்து ஒரு வாலிபன் இறங்கினன். கையிலே பெரிய மூட்டை : கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்தவன், கூனிக் குறுகி உட்கார்ந்திருந்த செல்லியைக் கவனித்து விட்டான். பத்து வருஷங்களின் பிரிவு அவன் மனத்திலிருந்து தாயின் முகத்தை அடியோடு அழித்து விடவில்லை. 'யம்மோவ் ' என்று அலறியவன் அப்படியே அவளேக் கட்டிக்கொண்டு கதறினன். அவன் ஒவ்வொரு நரம்பிலும் ஓடும் ரத்தம் பொங்கித் தணிந்தது. தசை நார்கள் கிடு கிடு வென்று நடுங்கின. என்னதான் இருந்தாலும், அவள் அவனுடைய தாய் அல்லவா? "கண்ணு! என் ராசா !” என்று கூச்சல் போட்ட செல்லி அவன் முகத்தைத் தடவித் தடவிப் பார்த்தாள் ; வேதனை பொங்கச் சிரித்தாள் ; பைத்தியம் போல் குதித் தாள். கதிர்வேலு மூட்டையைப் பிரித்தான். புளியஞ்சோறு, மசால்வடை, லட்டு, பூந்தி என்று பலகாரங்களில் நாகரிக் மும், அநாகரிகமும் கலந்த மூட்டை அது. " துண்ணு அம்மா.உனக்குத்தாம்மா......” "நீ துண்ணுடன் ராசா ?” 'நீ துண்ணு அம்மா...' தாயும், மகனும் உண்டார்கள். மகனுக்குக் குருமாக் குழம்பும், புலவும் ஆக்கிப் படைத்தாள் அன்ன. கண்ணிர் பிழிய விடை கொடுத்து அனுப்பினுள். அவனத் தன்னு டன் வைத்துக்கொள்ள அவளுக்கு ஆசைதான்.