பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O. தால் எப்படி ஏமாந்து போவான் ! ஊஹ"ம். நான் வர் மாட்டேன்’ கடைசியில், அருளுசலம் மட்டும்தான் போர்ை. 崇 ※ 涤 兹 அருணுசலத்தின் வாடிய உடல் படுக்கையில் கிடந்தது. இராப்பகலாய்ப் பணிவிடை செய்துவந்த கனகமும் சோர்ந்து காணப்பட்டாள். உறவில்லாத உறவைச் சிருஷ்டித்துக் கொண்டு ஐந்தாறு பேர்கள் ஒரு மாதமாக வீட்டில் டேரா போட்டுவிட்டார்கள். கிழம் தலையைப் போட்டால், சொத்தில் நாலில் ஒரு பங்காவது நமக்குக் கிடைக்காதா?” என்று ஒவ்வொருவருக்கும் உள்ளுக்குள் நைப்பாசை. அருளுசலம் இருமிஞர். கனகம் அவர் மார்பைப் பிடித்து விட்டாள். "நான் இனிமேல் பிழைக்கமாட்டேன்......: ஐயோ, அப்படிச் சொல்லாதேங்கோ......” " எனக்குக் கொடுத்து வைக்கல்லே...யாரோ கொள்ளி போடப்போரு......” " நீங்களும்தான் ஒரு மாமாங்கம் காத்துக் கொண்டிருந் தேள்.’’ 'அவன் வருவான் என்று எனக்கு நம்பிக்கையில்லை.” கட்டாயம் வருவான்!.என்ன விட்டுப் பிரிந்திருக்க அவளுல் முடியுமோ ? கனகத்தின் குரலில் அவநம்பிக்கை யின் ரேகையைக்கூடக் காணவில்லை. மாருக, அமானுஷ்ய உறுதியின் சாயல் தோன்றிற்று. அருளுசலம் அவளுக்காக வருந்தினர். இப்படியா ஒருத்தி இருப்பாள்!.....மகனே இழந்த தாய் துடித்துத் துடித்து உயிர்விடமாட்டாளோ? இது என்ன, பைத்தியக் கார நம்பிக்கை!...எனக்குப் பின்னும் இவள், அவன் வரவுக் காகக் காத்திருப்பாள் போலிருக்கிறதே! அசடு!...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/16&oldid=830293" இலிருந்து மீள்விக்கப்பட்டது