பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼53 பரமசிவம் பிள் 8ளயின் அழகான சம்பிரதாயத்தில் இன்னும் பாக்கி யிருக்கிறது! என் கைகளைப் பிடித்து அவர் உள்ளே தள்ளிக்கொண்டு போளுர், இன்று காலவரை ஓர் உயிர்விளக்கு எரிந்துகொண் டிருந்த கூடத்தில் ஒர் அகல்விளக்கு மினுக்கிக் கொண்டிருந்தது. என் செல்வம் அந்தச் சாணம் மெழுகப் பட்ட இடத்தில்தான் தன் மலர்மொட்டு விழிகளே மூடினுள். ஒரு வாரம் பத்து நாட்கள் என்ரு படுக்கையில் விழுந்து கிடந்தாள் அவள் ? ஓடி விளையாடிக்கொண்டிருந்தவள் நேற்று மாலை நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்தாள். திணறித் திணறி மூச்சு விட்டாள். பழிவாங்கத் துடித்த சிருஷ்டியின் இரக்கமற்ற சூன்ய இருளில் அவள் இரு கனவு விழிகளும் பதுங்கிக் களை த்தன. என் மனைவி, தன் தாய்மைக் கொடியில் விளைந்த செழுங்கனியின் மேல் விழுந்து புரண்டாள். பத்து வருஷங் கள் தபசிருந்து பெற்ற கனல், பாசத்தில் பற்றி எரிந்த போது நாங்கள் அழுது கதறுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? தெருவிலே கூடிப் போலி அநுதாபத்துடன் மக்கள் எங்களைச் சுற்றி வேடிக்கை பார்த்த போது, பரமசிவம் பிள்ளை டாக்டருடன் நுழைந்தார். சிந்தாமணியின் நாடியும், இருத்யமும் துடித்த துடிப் பில் டாக்டரின் உதடுகள் பிதுங்கிக் கொண்டன. ஏதோ மருந்து கொடுத்தார். "நாளேக்குச் சாயங்காலம் போளுல் தான் என்னல் எதுவும் சொல்ல முடியும்' என்று கூறி விட்டு அவர் நடையைக் கட்டினர். நான் சொல்கிறேன்!” என்று பக்கத்து வீட்டு வள்ளி மயிலுப் பாட்டி முன்னுக்கு வந்தாள். இது நாய்க்கண. இந்தக் கண முற்றிவிட்டால் மண்டையோடு தான். போகும்' என்ருள். -