பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


அவன் குறிப்பிட்ட அறையில் ஒரு மேஜை. அதன் மேல் சீப்பு, முகப்பெளடர் முதலியவை. சுவரில் நிலைக் கண்ணுடி, கோட்ஸ்டாண்ட் ஒன்றில் சில கோட்டுகள்இவை இருந்தன. பெரியவர் அங்குச் சென்று கண்ணுடியின் முன் தம் அழகைச் சிறிது செவ்வைப் படுத்திக் கொண்டு திருப்தியுடன் வெளியே வந்தார். " நான் ரெடி.” ' உட்காருங்க.’’ அன்ருட நாடகமேதான்.

  • இப்படித் திரும்புங்க கொஞ்சம் மேலே பாருங்க” ரொம்ப சாயாதீங்க கொஞ்சம் சிரிக்கணும்.”

" சிரிப்பு அதிகம் வேளுங்க. பொதுநல் ஊழியனுக்குச் சிரிக்க ஏதுங்க நேரம் ?’ என்ருர் அவர்.

  • இருந்தாலும் போட்டோவுக்கு......” * அதிகப்படி நமக்கு இஷ்டமில்லை.” மாணிக்கம் பொறுமையாய் மேலே வேலையைக் கவனித் தான். படம் எடுக்கப்போகும் சமயம், “ இருங்க இருங்க” என்ருர் வந்தவர்.
    • 5T 5Fr5ör 5), Tff 3**
  • பக்கத்திலே ஒரு மேஜைமேலே சில புஸ்தகம் வைத் தால் நல்லாயிருக்காது ?”
  • பொதுநல ஊழியருக்குப் படிக்க நேரமுண்டா? என்று மாணிக்கம் கேட்கவில்லை; நினைத்துக் கொண்டான்.

'இதெல்லாம் என்ன புஸ்தகம்?’’ * நீங்களே பாருங்களேன் ’’ என்ருன் மாணிக்கம். இங்கிலிஷிலே இருக்குது. நமக்குத் தமிழ்தாங்க தெரியும். பரவாயில்லே. படத்துக்குத்தானே ! என்ன புஸ்தகமான என்ன ?.”