பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


  • இ.தென்னடி இப்படி எழுதியிருக்கார் ?’ என்ருர் மனேவியிடம்.
  • லீவ் கிடைக்காதோ என்னவோ !” * அதுக்காக?.........சீமந்தம் செய்யாம விடலாமா ?” * மறுபடியும் எழுதுங்களேன்.......நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !’’
  • சரி, சரி. நீ வேறே கண்ணேக் கசக்காதே...... அலமு, இந்தாம்மா ’’ என்று அழைத்தார் பெண்ணை. அவள் வந்து நின்ருள். " நீ எழுதிப் போடம்மா ......... இதெல்லாம் சம்பிரதாயத்தை ஒட்டி நடந்தாகணும்......அப்புறம் ஊரிலே நாலு பேர் நாலுவிதமாப் பேசுவா......என்ன?’ என்ருர்,

வேறு வழியின்றி அவளே கடிதம் எழுதினுள். திரும்பத் திரும்ப, “செய்யாது விட்டோமானுல் நாலு பேர் நாலுவிதம் சொல்லுவா’ என்ற பல்லவியையே கடிதம் பூராவும் நிரப்பி அனுப்பிளுள். ஒரு வழியாக மாப்பிள்ளை அசைந்து கொடுத்தான். வருவதாகக் கடிதம் எழுதினன். இன்றுதான் பத்மனுபன் வரப் போகிருன். பாழும் மனசு வாசலுக்கு, வாசலுக்கு ஏன்தான் ஒடுகிறதோ ? வண்டி வந்து நின்றது. தேசிகாச்சாரி முதலில் இறங் கினர். பின்னுல் அவன் ! ' வாங்கோ’ என்று வரவேற்ருள் அலமு. : ** • • • • • • rtسها ** " வண்டி லேட்டா என்ன ? இல்லையே.....ஆறு பதினெட்டுக்கு வரவேண்டியது. .பதினேழுக்கே வந்துட்டானே !’ எப்படி இருக்கிறது? இந்த வேண்டாத தகவல்களை எல்லாம் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தெரிகிறது! வாசல் அறையில் அவனுக்குக் காப்பி கொண்டு போளுள். சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு, பனியனேடு ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தில் கணக்குக் குறித்துக்