பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


என்று பார்ப்பதில்லையே. புதரில் பூத்த புதுமல்லி போன்று தோன்றிய அவள் பாடிய பாடலும் அவள் தோற்றமும் தரும சிந்தனே யற்றவர்களேயும் இரங்கும்படி செய்தன. அவளுக்கு வழிகாட்டி உதவி வந்த அந்த வாலிபன் தான் எல்லோருக்கும் வணக்கம் செலுத்தி கிடைத்த காசு களை வாங்கி வந்தான். ஏழைகள் வயிறு எரியச் செய்தேனே ? இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனே ? என்று தொடர்ந்து அவள் பாடும்போது அந்தக் கம்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் தரும துரைகளாகவே விளங்கினர். சில நிமிடங்களில் அந்தக் கம்பார்ட்மெண்ட் வேலை அவர்களுக்கு முடிந்தது. கதவருகே போய் அவர்கள் அமர்ந்தனர். அந்த வாலிபன் கிடைத்த காசை எண்ணிக் கூறினன். அவன் எந்தப் பள்ளிக் கூடத்திலும் படித்தவ னல்லன். எட்டணு என்று அவன் கூறியபோது அவள் முகத்தில் எந்த மாறுதலேயும் காணுேம். நாலணுவை காலே நாஸ்தாவுக்கு வச்சுக்க...மீதிக்கு இரண்டு பன்னும், டீயும் வாங்கிடு என்று வரவு செலவுத் திட்டம் கூறினுள். ரயில் செங்கல்பட்டு சந்திப்பை நெருங்கிக் கொண்டி ருந்தது. ரயில்கேட்டு வந்துடுத்தா ?’ என்ருள் அவள், அப்போது ஏற்பட்ட ஒலி மாற்றத்தைக் கொண்டே. அந்தப் பாசஞ்சர் செங்கல்பட்டு சந்திப்பின் முதல் பிளாட்பாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. லயன் மாறுவதால் ஏற்பட்ட குலுக்கலால் அவள் நிலை தடுமாறிள்ை. -- - 'பூங்காவனம் வண்டிக் கதவருகே நிற்காதே. வண்டி நின்ற பிறகு இறங்கலாம் என்று அவள் எச்சரித்தாள். பூங்காவனம் குருடியை அழைத்துக் கொண்டு பிளாட் பார ஓரமாக உட்கார வைத்துவிட்டு, டீ ஸ்டாலே நோக்கிச்