பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


மல்லி உட்காரவில்லை. நின்று கொண்டே இருந்தாள். * எம்மா நேரம் நிற்பே.அந்தப் பய பூங்காவனம் எங்காவது சுத்தப் போயிருப்பான். இல்லாட்டி அந்தப் பஸ் ஸ்டாண்டிலே கண்னம்மா இருக்குது, அதைத் தேடிப் போயிருப்பான்’ என்று கூறிவிட்டு முத்தையன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான். அவள் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு அவனிடம் காணப்பட்டது. மல்லிக்குக் கண் மட்டும் இருந்துவிட்டால் முத்தையா அவளே விழுங்கி விடுவதுபோல் பார்ப்பதற்கு அவனேப் பொசுக்கி இருப்பாள்.

  • மல்லி, இன்னும் நீ பூங்காவனத்தை நம்பறே. ஒரு நாள் இல்லாட்டா ஒருநாள் உன்னே விட்டுட்டு ஒடிடப் போருன்’ என்று கூறிக்கொண்டே முத்தையன் எழுந்தான்.

தொலைவில் சென்னையிலிருந்து வரும் மதுரை பாசஞ் சரின் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. இந்த வண்டியிலே நான் திண்டிவனம் போறேன். நீ வர்றியா?’ என்று கேட்டான் முத்தையன். மல்லி சம்ம திச்சால் பிச்சை எடுக்க அவளுக்கு உதவி செய்யக் கூடத் தயங்கமாட்டான். " நான் வல்லே. ராவு தூக்கம் இல்லாட்டி பகல்லே அலேய முடியாது’ என்று மல்லி கூறினுள். ‘ராவு தூக்கமா ?-என்று எகத்தாளத்தோடு கேட்டு விட்டு முத்தையன் அங்கிருந்து சென்ருன். மல்லிக்கு ஏனே பரபரப்பு அதிகமாகியது. நிம்மதியாகப் பாடிப் பிச்சையெடுத்து வாழும் வாழ்வைக் குலைக்க இந்த முத்தையன் வந்து சேர்ந்தானே என்று அவள் மனம் வேதனைப்பட்டது. சிறு வயதிலிருந்தே மல்லி இந்தத் தொழிலில் ஈடுபட வில்லை. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு கிராமம் ஒன்றில் மல்லி பிறந்தாள். பிறக்கும்போதே இரண்டு கண் களும் அவளுக்குக் கிடையாது. வருமானமும் அதிக மில்லாது மண்வெட்டிக் கூலி கொண்டுவந்து வயிறு