பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


வளர்த்த அவளது பெற்ருேர்களுக்கு மல்லி பெரும் பிரச்னை யாகவே இருந்தாள். அவர்கள் வேலைக்குப் போகும்போது குருட்டுப் பெண்ணேப் பார்த்துக் கொள்ள ஆள் கிடையாது. அண்டை அயலார் ஆதரவில் வளர்ந்து வந்த மல்லிக்கு எப்பொழுதுமே அண்டை அயலாரே ஆதரவு எனப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. பெரும் கிணறு ஒன்று வெட்டிக் கொண்டிருக்கும் போது மண் சரிந்து விழவே இருவரும் பூமிக்கடியில் புதைந்துவிட்டனர். - - இருண்ட உலகத்தில் மல்லிக்கு ஆதரவு தருவதற்கு கிழவி ஒருத்தியைத் தவிர வேறு எவருமில்ல. அந்தத் தள்ளாத வயதில் அவள் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்த போது குருட்டுப் பெண்ணையும் சேர்த்துக் காப்பாற்ற அவளால் முடியவில்லே. அந்தப் பகுதியில் பல வருடங் களாக மழை பெய்யாததால் பஞ்ச நிலைமை ஏற்பட்டது. கிழவிக்குக் குடிக்கக் கஞ்சிகூட கிடைக்கவில்லை. அரை வயிற்றுக்குக் கிடைத்தாலும் மல்லிக்குக் கொடுத்துவிட்டுத் தான் சாப்பிடுவாள். பிழைக்கப் பட்டணம் பெரிதும் உதவும் என்று சென்னை நகரை வந்தடைந்த கிழவிக்கு, வந்த பிறகுதான் பட்டண நிலை புரிந்தது. பிழைப்பு அவ்வளவு சுலபமில்லை என்பது புரிந்தது. சுலபமான தொழில் பிச்சை எடுப்பதுதான் என்பது தெரிந்தது. கிழவிக்குத் தொழில் பழக்கமேது ? உண்மையான கஷ்ட நிலையையும், குருட்டுப் பெண்ணையும் எடுத்துக் காட்டி பிச்சை எடுத்து வந்தாள். குருடிக்கும், கிழவிக்கும் இரக்கம் காட்டாத அளவுக்கு மனித இதயத்தில் ஈரம் காய்ந்துவிட வில்லை. கிழவிக்கு இராமலிங்க அடிகளின் பாடல்கள் பல மனப்பாடம். அதைப் பாடி ரயில் வண்டிகளில் பிச்சை எடுக்கும்போது இதயம் கனிந்து உதவாதவர் இல்லை. மல்லிக்கு விவரம் அறியும் வயது வந்தபோது கிழவி காய்ச்சலால் கண்ணே மூடிவிட்டாள். அப்பொழுதுதான் கிழவிக்குத் தெரிந்த பூங்காவனம் மல்லிக்கு உதவ முன் வந்தான். - - முத்தையன் போனபிறகு படபடப்பு அடங்க மல்லிக்கு வெகு நேரமாகியது. - 3 *