பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய எளிய தமிழ் உரைநடை” மாணவர்-1: ஐயா, வணக்கம். பெரியவர்: தம்பி வா! குறித்த வேளையில் வந்த விட்டா யல்லவா? அதுதான் நல்லது. ஆமாம், மற்றவர்கள் எங்கே? மாணவர்-1: அதோ அவர்களும் வந்து விட்டார்கள். பெரியவர்: நல்லது அனைவருக்கும் காலத்தின் அருமை புரிகிறது. சரி உட்காருங்கள். (அனைவரும் உட்காருகின்றனர்) ஆமாம், நேற்று நாம் படித் தது நினைவில் இருக்கிறது அல்லவா? மாணவர்: கன்ருக நினைவு இருக்கிறது ஐயா. மொழி நமக்கு எதற்குப் பயன்படுகிறது என்பதைச் சொல்லிக் கொடுத்தீர்கள். பெரியவர்: கன்ருக நினைவில் வைத்திருக்கிறீர்கள். நம்முடைய கருத்துக்களை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளப் பயன்படுவது மொழியல்லவா? மாணவர்-3 ஆமாம் ஐயா! ஒருவர் கருத்தை ஒரு வருக்கு விளக்கிச் சொல்லப் பயன்படுவது மொழி என்பதை கன்ருகப் புரிந்துகொண்டோம். மாணவர்-8: ஐயா, அந்த மொழி மக்கள் வாழ்வில் பெறும் முக்கிய இடத்தையும் சொன்னீர்கள். *வானெலியில் 66