பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய எளிய தமிழ் உரைாடை பெரியவர்: சரியாகப் புரிந்துகொண்டீர்கள். உலகத் தில் இன்று நாடுகளெல்லாம் இந்த மொழி அடிப்படையில்தாம் அமைந்துள்ளன. நம் இந்தி, யாவில் உள்ள மாநிலங்களும் அவ்வாறே பிரிக்கப் பட்டுள்ளன அல்லவா? மாணவர்-1: ஆம்! எங்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். பெரியவர்: நல்லது. உங்கள் தமிழ் நாடும் தமிழ் மொழியின் பெயரில்தானே உள்ளது. மாணவர்-2: ஆம் ஐயா. 'தமிழ்த்திரு நாடு தன்னைப். பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா' என்ற பாரதியின் பாப்பாப் பாட்டும் கினைவுக்கு வருகிறதே! - - பெரியவர்: நல்லதுதான். அந்த மொழி எல்லோ ருக்கும் புரிய வேண்டும் என்ற அடிப்படை உங்களுக்குத் தெரியுமா? மாணவர்-3: ஓரளவு தெரியும். என்ருலும் அதன் தன்மையைத் தாங்கள் விளக்கினல் நல்லது. பெரியவர்: ஆம்! ஆம்! இன்று அதைப் பற்றித்தான் சொல்லப்போகிறேன். மாணவர்: சொல்லுங்கள் ஐயா. பெரியவர்: மொழி கருத்தை விளக்கப் பயன்படுவது தானே? மாணவர்: ஆம் ஆம்! பெரியவர்: அத்துடன் அந்த மொழி, தன்னைப் பேசும் மக்களுடைய பழைய வரலாறு, வாழ்க்கை 67