பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றங்கரை நாகரிகம் காவிரியும் வையையும்’ பாடல்: " உழவர் ஒதை மதகோகை உடைநீர் ஒதை தண்பதங்கொள் விழவர் ஒதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி விழவர் ஒதை சிறந்தார்ப்ப நடந்த வெல்லாம் வாய்காவா மழவர் ஒதை வளவன்றன் வளனே வாழி காவேரி " (மெல்லிய இசையுடன் வானெலியில் ஒலிபரப் பாகின்றது) ஆசிரியர்: தம்பி இப்பாடல் உனக்குப் புரிகிறதா? மாணவர்: ஆம். ஓரளவு புரிகிறது. இது காவிரி யைப் பற்றிய பாடல் அல்லவா? ஆசி: ஆம் உண்மையே! இக் காவிரியைச் சிலப்பதி காரம் பாடிய புலவர் இளங்கோவடிகள் இவ்வாறு அழகாகப் பாடுகிரு.ர். மாண: புரிகின்றது. கோவலன் கதையை எழுதிய இளங்கோவடிகள் ஆற்றைப் பற்றி இவ்வளவு அழகாகப் பாடுகிருர் . ஏன்? - ஆசி: தம்பி! இதில் தான் உண்மை இருக்கிறது. உலக நாகரிகங்கள் எல்லாமே ஆற்றங்கரையை ஒட்டியே வளர்ந்துள்ளன; வாழ்ந்துள்ளன. இன்று வாழ்கின்ற நாகரிகங்களும் சரி, வாழ்ந்து

  • 28-1 1-69–2-30 unof

5