பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12



ரகு பதில் சொல்ல முன்வந்தான்.

“நம் நாட்டு தேசியக் கொடியை ஏற்றி வணங்கினால் அது நம் நாட்டையே, பாரதத் தாயையே வணங்கியது போலாகும்.”

சரியாகப் பதில் கூறிய ரகுவின் முதுகில் செல்லமாகத் தட்டிப் பாராட்டினர், மாமா. எதையோ நினைத்துக் கொண்டவன்போல் தொடர்ந்து சொன்னான் :

“பாரதியார் ‘கொடி வணக்கப் பாடல்’ எழுதியிருக்கார். அதிலேகூட “தாயின் மணிக்கொடி பாரீர்!” என்றுதான் எழுதியிருக்கிறார், மாமா.”

“உண்மைதான், ரகு. நம் பாரத மாதாவே கொடி உருவத்தில் இருக்கிறதாக நம்புறோம். அதனாலே தேசியக் கொடியைப் போற்றி வணங்குகிறோம். நம் தேசியக் கொடியை வணங்கினா, அது அன்னை பாரத மாதாவையும் நாட்டையும் வணங்கியதாக ஆகும்.” மாமா விளக்கமாகக் கூறிமுடித்தார்.

“அப்படியானால், நம் நாட்டின் மிக உயர்ந்த சின்னம் தேசியக் கொடிதானா மாமா?” தெளிவாக அறிந்து கொள்ள கோமதி கேள்வி எழுப்பினாள்.