உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 அடிகளாசிரியர்

44. சின்னப்பாப்பினை வினவுதலும் அது கூறும் விடையும்

(செவிலியும் சிறுமியும் வினாவிடை)

சுவை : உவகை

1. சின்ன பாப்பு! சின்ன தங்கம்!
     என்ன செய்யுறே?
   சீக்கி ரமாய்ப் பாலைக் காய்ச்ச
     அடுப்பு மூட்டுறேன்.

2.பாலைக் காய்ச்சிப் பசியைத் தீர்க்கக்
     குடிக்கப் போறியா?
  பானை யிலே தயிரைத் தோய்ச்சுக்
     கடையப் போறியா?

3.குடிப்ப தற்கும் கடைவ தற்கும்
    பாலைக் காய்ச்சலே
  குழந்தைக்காகப் பாலைக் காய்ச்சிக்
    கொடுக்கப் போகிறேன்.

4.யார் குழந்தை? எங்கி ருக்குது?
    எனக்குச் சொல்லுனும்
யாரும் அதனை வளர்ப்ப தற்கே
    எண்ண வில்லையா?

5. தாயும் இல்லை; தந்தை இல்லை
     மிகஇ ரங்கணும்;
   தச்சன் செய்து விற்று விட்டான்
     தயவும் இன்றியே.

6.காசு கொடுத்து ஆசை யாக
    நானும் வாங்கினேன்;
 கவலை கொண்டு அன்று முதல்
   நான்வ ளர்க்கின்றேன்.