உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுவர் இலக்கியம் 53

43.வறுமைக் குழந்தை

(கண்டோர் கூற்று)

சுவை: இளிவரலும் அழுகையும்

1. வறியோர் வீடாம் குடிசையிலே
     வந்து பிறந்த குழந்தையைப்பார்;
  சிறுமை தனையே இளமையினிற்
      சேர்ந்து நிற்பது பரிதாபம்.

2. எண்ணெய் அறியாத் தலைமயிரில்
      ஈரும் பேனும் குடியிருக்கும்;
   உண்ணப் பாலும் கிடையாது;
      உணவும் வயிற்றை நிரப்பாது.

3. நெய்யும் தயிரும் கண்டதில்லை;
      நீரா காரமும் கூழுமுண்டு;
   கையில் தீனி கிடையாது;
     கட்டத் துணியும் அதற்கில்லை.

4. சின்ன குடிசை அதன்வீடு;
     சிறுசிறு கந்தல் அதன்படுக்கை
  பொன்னைப் போல நிறமிருந்தும்,
     புழுதி அதனை மறைத்திருக்கும்

5. சிணுங்கும் முகமே அதற்குண்டு;
     சிரித்த முகத்தைக் கண்டதில்லை;
   இணங்கிக் கூடி விளையாட
     எந்தக் குழந்தையும் வருவதில்லை.