பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வகை எதிரிக் கப்பல்களை தாக்கிச் சிதறடிக்கும். இவை "நாசகாரி (Destrover) என்ற பெயரால் அழைக் கப்படுகிறது. டார்பிடோ என்பது மற்றொரு கடற்படைப் போர்ச் சாதனம். இது படகு வடிவில் இருக்கும். ஏவுகணை பொருத்தப்பட்டது. இதை எதிரிக் கப் பலைநோக்கி நீருக்கடியே ஏவுவார்கள். இது விரைந்து சென்று எதிரிக் கப்ப லோடு மோதி வெடித்து நாசத்தை ஏற்படுத்தும். விடுதலை பெற்ற இந்தியா பிற துறைகளைப் போன்றே கப்பற்படை யையும் நவீன முறையில் வலுவாக அமைத்துக் கொண்டுள்ளது. இந்தி யக் கப்பற்படையில் முதலாவது போர்க் கப்பல் 1981ஆம் ஆண்டில் இணைக்கப்பட்டது. விக்ராந்த்' எனும் பெயருடைய இப்போர்க் கப்பல் அளவிலும் வடிவிலும் மிகப் பெரிய தாகும். இது விமானந் தாக்கிக் கப் பலுமாகும். இதன் எடை 20,820 மெட்ரிக் டன் ஆகும். இக் கப்பலின் நீளம் 215 மீட்டர். இதில் விமானங் களைத் தாக்கி வீழ்த்தவல்ல சக்தி மிக்க பீரங்கிகள் பொருத்தப்பட்டிருக் கும். ஜெட் போர் விமானங்கள் நீருள் பாய்ந்து நீர் மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் விமானம் போன்ற வை இதிலிருந்து கிளம்பிச் செல்ல முடியும். கடிகா ரய இந்தியக் கப்பற்படை வலுமிக்க இராணுவப் பிரிவாக அமைந்துள்ளது. இதில் மேற்கண்ட வகையான போர்க் கப்பல்களுடன், இந்தியக் கடல் எல் லைகளில் ரோந்து சுற்றி காவல் காக் கும் கப்பல்களும் உள்ளன. பம்பாய், கல்கத்தா, விசாகப்பட்டினம் துறை முகங்களில் எல்லா வகையான கப் பல்களும் கட்டப்படுகின்றன. கடிகாரம்: நேரத்தைக் கணக்கிடும் இந்த அரிய கருவியை கண்டுபிடிக்கு முன், பழங்கால ம னி த ர் க ள் நேரத்தை அளக்க நிழலையே நம்பி யிருந்தார்கள். மரத்தின் நிழல் கிழக் குப் பக்கம் நீண்டிருந்தால் காலை நேரம் என்றும் மேற்குத் திக்கில் நீண்டிருந்தால் மாலை நேரம் என் றும் குறுகி இருந்தால் நண்பகல்என்றும் கணக் கிட்டு வந்தார்கள். இவ் வாறு அறிய பகல்நேரத் தில் மட்டுமே இயன்றது. இரவில் நேரத்தைக் கணக்கிட்டறிய நீர்க் கடிகாரத்தைப் பயன் படுத்தினார்கள். ஒருபாத் வைத்துக் 狄 ーリー 2ー o, శ్రశ$$: காலத்தைக் கணக்கிடப் பயன்பட்ட பழங் கருவி 彰 கள் கொண்டு ஒரு சிறு துளை வழியாக நீரைச் சொட்டச் செய்வார்கள்.