பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்பூசியஸ் தென்றல் அ ல் ல து தலைமைப் பொழிவு, சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து, இந்தியாவும் விடு தலையும் ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கனவாகும். மனித வாழ்க்கை யும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, உள்ளொளி ஆகிய நூல் கள் இவரது காலத்திற்கேற்ற சிந்த னைத் திறத்தைப் புலப்படுத்துவ னவாகும். இனிமை, எளிமை, தூய்மை என்ப தற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர் கள். கலைக் களஞ்சியம்: ஒரு சொல் லுக்கு உரிய பொருளை மட்டும் வழங் குவது அகராதி. அச்சொல் தொடர் பான அனைத்துச் செய்திகளையும் வழங்குவது கலைக் களஞ்சியம். இத்தகைய கலைக் களஞ்சியங்கள் உருவாக வழிகாட்டிய பெருமை அரிஸ்ட்டாட்டில் எனும் கிரேக்க மேதையைச் சேரும். அவர் தனக்கு முன்பு வாழ்ந்த அறிஞர்களின் எழுத்துகள், நூல்கள், ஆற்றிய சொற் பொழிவுகள், கூறிய அறிவுரைகள், ஆகிய அனைத்தையும் முறையாகத் தொகுத்தளித்தவர். தொடக்கக்கால கலைக்களஞ்சியங் கள் இன்றுள்ளவை பொருள் வாரியாகவோ, சொல் வாரியாகவோ அ ைம ந் தி ரு க் க வில்லை. பொருள் வரிசைப்படி முதல்கலைக்களஞ்சியத்தைஉருவாக் கிய பெருமை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆஸ்டெட் என்பவரையே சாரும். அதன்பின்னரே சொல் வாரி யாகக் கலைக்களஞ்சியம் தயாரிக்கும் முறை உருவாகியது. போன்று, 187 தமிழில் கலைக் களஞ்சிய அடிப் படையில் உருவான முதல் நூல் 'அபிதான கோசம்' என்பதாகும். இது வெளிவந்த ஆண்டு 1902 ஆகும். அதைத் தொடர்ந்து 1910இல் 'அபிதான சிந்தாமணி’ எனும் நூல் ஆங்கிலக் கலைக்களஞ்சியம்போல் வெளிவந்தது. தமிழில் அனைத்துத் துறைகளையும் உட்கொண்ட முழு மையான கலைக் களஞ்சியத்தை தமிழ் வளர்ச்சிக் கழகம் 10 தொகுதி களாக வெளியிட்டது. பின்னர் அதே கழகம் குழந்தைகள் கலைக் களஞ் சியம் 10 தொகுதிகளை வெளியிட் டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தமிழில், அறிவியல், வாழ் வியல் களஞ்சியங்களைத் தனித்தனி யாக வெளியிட்டு வருகிறது. கன்பூசியஸ்: சுமார் 2,500 ஆண்டு கட்கு முன்பு சீனாவில் வாழ்ந்த தத் கன்பூசியஸ் துவ ஞானி கன்பூசியஸ் ஆவார். இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவர் தன் தாயாரோடு மிகுந்த வறுமையில் வாழ்ந்தார்.