பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காகிதம் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள் ளது. முன்னொரு காலத்தில் குமரி முனைப் பகுதியோடு இணைந் திருந்த பெரும் நிலப்பகுதி குமரிக் கண்டம் என அழைக்கப்பட்டது. அப்பகுதி இன்று கடலுள் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகிறது. கேரள மாநிலப்பகுதியாக இருந்த குமரி முனைப் பகுதி 1956 முதல் தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டது. காகிதம்: இன்றைய வாழ்வில் காகி தம் இன்றியமையாத பொருளாக அமைந்துள்ளது. காகிதம் மரம், மூங் கில், சணல், பருத்தி, கந்தைத் துணி போன்றவற்ற்ைக்கொண்டு செய்யப் படுகிறது. பட்டை நீக்கித் துண்டு துண்டாக வெட்டிய மரத்தை நீரிலிட்டு கூழாக அரைப்பார்கள். நீரில் மிதக்கும் நாரை நீக்கிவிட்டு கூழைச் சேகரிப் பார்கள். இது “காகிதக் கூழ்” எனப் படும். இந்தக் கூழை மரத்துண்டு களுடன் இரசாயனப் பொருளைக் கலந்து கொதிக்க வைத்து கூழ் தயா ரிப்பதும் உண்டு. உயர்ந்த காகிதம் செய்ய இத்தகைய கூழே சிறந்தது. மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட கூழைக் கொண்டு இயந்திரம் மூலம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் காகிதம் செய்யப்படுகிறது. பக்குவ மாகத் தயாரிக்கப்பட்ட கூழ் சல்லடை மீது வார்க்கப்படும். இச்சல்லடை அதிர்ந்து கொண்டே இருப்பதால் கூழிலுள்ள நீர் வடிந்துவிடும். தொடர்ந்து உருளைகள் மூலம் கூழி லுள்ள இழைகள் நெருக்கமாக்கப் படும். மேற்பரப்பும் உருளை மூலம் மிருதுவாக்கப்படும். உலர்ந்ததும் உருளைகள் மீது படிந்துவரும் காகி தம் தனி உருளையில் சுற்றப்பட்டு சுருளாகிறது. காகிதம் செய்யும் முறையை முதன் முதலில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கண்டறிந்தவர்கள் சீனர்கள். ஆயிரம் ஆண்டுகட்குப்பின் இக் கலையை அராபியர்கள் கற்றார்கள். பின் மேற்கு நாடுகளுக்குப் பரவியது.