பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலிலியோ அட்டவணையையே இன்றும் யூத சமயத்தினர் சமய அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது நாம் பயன்படுத்தி வரும் நாட்காட்டியைக் கணித்தவர் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர் ஆவார். கி.மு. 46இல் ஓர் ஆண்டிற்கு 365 நாட்கள் எனக் கணித்தார். தொடக்க மாதமாக ஜனவரி ஆக்கப் பட்டது. மூன்று ஆண்டுகள் 365 நாட்களை உடையதாகவும் நான்கா வது ஆண்டு 366 நாட்களை உடையதாகவும் கணிக்கப்பட்டது. இவ்வாறு வரும் நான்காவது ஆண்டு ‘லிப் ஆண்டு' என அழைக்கப்பட் டது. இது ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறை எனக் கூறப்படுகிறது. கிருஸ்துவின் பிறப்புநாளை முதல் நாளாகக் கொண்டு கணிக்கும் முறை வழக்கில் வந்துள்ளது. வரலாற்றில் காலத்தைக் குறிக்க கிருஸ்துவுக்கு முன் என்பதை கி.மு. என்றும், கிருஸ்துவுக்குப்பின் என்பதை கி.பி. என்றும் அழைக்கும் மரபு நடைமுறை யில் இருந்து வருகிறது. திருவள்ளு வர் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப்படுகிறது. நபிகள் நாயகம் மக்காவிலிருந்து மதினா சென்ற நாளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டும் கணிக் கப்பட்டுள்ளது. காலிலியோ: புகழ்பெற்ற இத்தா லிய வானவியல் அறிவியல் மேதை. பீசா நகரில் எளிய குடும்பத்தில் பிறந்த இவர் விஞ்ஞான வளர்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இளம் வயதில் இவரை மருத்துவ இயல் படிக்க வைக்க இவர் தந்தை விரும்பி னார். ஆனால் இவர் கணிதமும் 148 அறிவியலும் கற்று விஞ்ஞானி ஆனார். வளர்ந்து வரும் அறிவியல் துறை வளர்ச்சிக்கு மக்களிடையே மண்டிக் கிடக்கும் தவறான நம்பிக்கைகள் தடையாக இருப்பதை உணர்ந்தார். காலிலியோ அறிவியல் உண்மைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் பெ ரு ம் முரண்பாடு இருப்பதை அறிந்து வருந்தினார். வானவியலிலும், இயற்பியலிலும் பெரும் வல்லுநராகத் திகழ்ந்த காலி லியோ மாதாகோயில் சென்றிருந்தார். அங்குதொங்கிக் கொண்டிருந்த விளக் கொன்று காற்றில் ஆடிக் கொண் டிருந்தது. விளக்கின் ஆட்டம் சில சமயம் அதிகமாகவும் சில சமயம் குறைவாகவும் இருந்தது. ஆனால் ஒரு முனையிலிருந்து மறுமுனை சென்றுவரும் நேரம் ஒரே மாதிரியாக இருந்தது. அவர் கண்டறிந்த இந்த உண்மையே ஊசல் தத்துவம்: ஆகும். அதன் அடிப்படையிலேயே ஊசல் கடிகாரங்கள் உருவாக்கப்பட் டன. மற்றொரு சமயம் காலிலியே பீசா நகர சாய்ந்த கோபுர உச்சியி லிருந்து கனமான, கனம் குறைந்த பொருட்களைப் போட்டார் அவை