பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மலேசியா: ஆசியாவின் தென் கிழக்கே அமைந்துள்ள மலேசியா ஒரு சுதந்திர நாடாகும். மலேசியா தீபகற்பமும் போர்னியோ தீவுப் பகுதி களான சபா, சரவாக்கும் இணைந்த நாடே மலேசியா, சுமார் ஒன்றரைக் கோடி மக்களைக் கொண்ட இந்நாட் டின் மொத்தப் பரப்பளவு 8,29,749 சதுர கிலோமீட்டர் ஆகும். மலேசியா மலேசியா நாடு மலைகள் அடர்ந்த பகுதியாகும். அதனாலேயே மலை நாடு’ எனும் பொருளில் மலேசியா என அழைக்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிகமாக ரப்பர் விளையும் நாடு மலேசியா ஆகும். மலேசியாவில் செம்பனைகளும் அதி கம் பயிரிடப்படுகிறது. இதன் விதை யிலிருந்து பாமாயில் தயாரிக்கப்படு கிறது. நெல் வாழை அதிகம் பயிரிடப் படுகிறது. அன்னாசி போன்ற பழ மாரீக்கோனி வகைகளும் இங்கு மிகுதியாகப் பயி ரிடப்படுகின்றன. மலேசியாவில் அதிக அளவில் கிடைக்கும் தாதுப்பொருள் வெள்ளிய மாகும். உலக உற்பத்தியில் 40 சத வீத வெள்ளியம் இங்குதான் கிடைக் கிறது. இரும்பும் தங்கமும் சிறிய அள வில் கிடைக்கின்றன. சரவாக் பகுதி யில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது. மலேசியாவில் மலேயர்களுக்கு அடுத்தபடியாக சீனர்களும் இந்தியர் களும் வாழ்கின்றனர். இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் ஆவர். சரவாக், சபா பகுதியில் ஆதிக்குடிகள் வாழ்கின்றனர். மலேசி யாவின் தேசிய மொழிகள ச மலாய் மொழியும் ஆங்கிலமும் உள்ளன. சீனமும் தமிழும் வழங்கப்பட்டாலும் அரசு மொழிகளாக இல்லை. மலேசியா மன்னராட்சிக்குட்பட்ட ஜனநாயக நாடாகும். ஒன்பது மன் னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி கள் இணைந்த கூட்டரசாக மலேசி யா உள்ளது. இந்த ஒன்பது மன்னர் களில் ஒருவர் மாமன்னராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு ஆட்சித் தலைமை ஏற்கிறார்.அமைச்சரவையும் நாடாளு மன்றமும் ஆட்சி செய்கின்றன. மலாய் மொழியில் சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் பெரி தும் கலந்துள்ளன. மலேசியர்களில் பெரும்பாலோர் இஸ் லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களாவர். மார்க்கோனி, கம்பி இல்லாத தந்தி முறையைக் கண்டறிந்த மாபெரும் அறிவியலார் மார்க்கோனி. இத்தாலி நாட்டிலுள்ள பொலோன எனுமிடத் தில் பிறந்த இவர் இளமையில் அறி