பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹைட்ரஜன் ஹெலிகாப்டரை உருவாக்கும் சிந் தனை 1500ஆம்ஆண்டில் லியானார் டோ டாவின்சி எனும் ஒவிய மேதைக்கு ஏற்பட்டது. அவர் கற் பனையாக அப்படியொரு பொறியை வடிவமைத்தார். ஆனால், அக்காலத் தில் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத தால் அதுவெறும் வடிவமைப்பாகவே இருந்தது. 1910ஆம் ஆண்டில் ஈகாரி சிக்கார்ஸ்கி எனும் ரஷ்யரும் லூயி சார்லஸ் பிரெகுவே எனும் பிரெஞ்சுக் காரரும் வேறு சிலரும் ஹெலிக்காப் டர் வடிவமைப்பில் சிறு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். 1988-40ஆம் ஆண்டு களில் அம்முயற்சி வெற்றி பெற்றது. இன்றைய ஹெலிகாப்டரின் அடிப் படையோடு கூடிய சிறு விமானம் உருவானது. இன்றைக்குத் தேவைக் கேற்ப பற்பல வடிவிலும் அளவிலும் ஹெலிக்காப்டர்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஹைட்ரஜன் காற்றைவிட எடை குறைந்த வாயு ஹைட்ரஜன். இது வாயு வடிவிலுள்ள தனிமம் ஆகும். இதன் இயைபியற் குறியீடு H ஆகும். இதை ஒரு தனிமமாகக் கண்டறிந்த வர் காவண்டிஷ் என்பவராவார். இதற்கு 'ஹைட்ரஜன்’ எனப் பெய ரிட்டவர் லாவாசியர் எனும் அறி வியல் ஆய்வாளர் ஆவார். இதற்கு "நீரை உண்டாக்கும் பொருள்” என் பது அர்த்தமாகும். ஹைட்ரஜனை எரித்தால் நீர் உண்டாகும். ஹைட்ரஜன் வாயுவைப் போல் 144 மடங்கு எடை அதிகம் உள்ளது காற்று. இதுவரை அறியப்பட்டுள்ள வாயுக்களில் எடை குறைவான வாயு ஹைட்ரஜன். இது தனியாக அதிகம் இருப்பதில்லை. ஆனால், கதிரவ னைச் சுற்றி இவ்வாயு பெருமளவில் சூழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள் ளார்கள். ஹைட்ரஜன் வாயு நீரிலும் தாவரப் பொருட்களிலும் எண்ணெய் வகை மற்றும் இரசாயனப் பொருட் களிலும் அதிகம் உண்டு. பொருள்கள் தீப்பற்றி எரிவதற்கு ஹைட்ரஜன் வாயு துணை செய் சிறது. ஹைட்ரஜனை ஆக்சிஜ னுடன் சேர்த்தால் நீர் உண்டாகும். ஹைட்ரஜன் வாயு மற்ற உலோக மல்லாத பொருள்களுடன் சேரும் போது புதிய கூட்டுப்பொருள் உரு வாகும். மின் பகுப்பு முறை மூலம் கூட்டுப் பொருள்களிலிருந்து ஹைட் ரஜன் வாயுவைத் தனியே பிரித் தெடுக்கலாம். ஹைட்ரஜன் வாயு இன்று பல்வேறு வழிகளில் பயன்பட்டு வருகிறது. காற்றைவிட எடை குறைந்த வாயு வாக உள்ளதால், பலூன்களில் அடைத்து, அதில் ஆய்வுக் கருவி களை வைத்து வானில் பறக்கவிட்டு வாயு மண்டல ஆய்வு செய்யப்படு கிறது. ஹைட்ரஜன் வாயு எரியும்போது மிக அதிக வெப்பத்தை வெளிப்படுத் தும் இயல்புடையது. இதனால் பற்ற வைப்புத் தொழிலில் இவ்வாயுவை மிகுதியும் பயன்படுத்துகிறார்கள். ஹைட்ரஜனை மற்ற பொருட்களு டன் இணைத்துக் கூட்டுப்பொருள் தயாரிக்கலாம் என்று கூறினோமல்ல வா, அதற்கு ஹைட்ரஜனேற்றம் என்று பெயர். இப்போது ஹைட்ரஜ னேற்றம் முக்கிய செய்முறையாக இன்று அமைந்துள்ளது. இதன் மூலம் நிலக்கரி போன்ற திட எரி பொருளைத் திரவ எரி பொருளாக மாற்ற இயல்கிறது. திரவ நிலையில் உள்ள கொழுப்புப் பொருளைத் திட நிலைக்கு மாற்ற ஹைட்ரஜனேற்ற செய்முறை பயன்படுகிறது. வனஸ் பதி இவ்வகையிலேயே தயாரிக்கப் படுகிறது.