பக்கம்:சிற்றம்பலம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சிற்றம்பலம்

காட்டுக்கு ஒப்பான தென்றும் அப்பர் சுவாமிகள் அருளு கிரு.ர். -

"கிருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்

அவையெல்லாம் ஊரல்ல; அடவி காடே."

அந்த அந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் ஊரில் உள்ள திருக்கோயில்களில் நாள்தோறும் வழிபட்டார்கள். சில சிறப்பான நாட்களில் வேறு தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து வந்தார்கள். சில தலங்கள் தம்பால் வந்து வழிபட்டுப் பேறுபெற்ற பெரியோர்களால் மிக்க சிறப்பைப் பெற்றிருக்கின்றன. இறைவனுடைய கருணத் திருவிளையாடல்கள் பல சிகழ்ந்தமையால் பல தலங்கள் பெருமைபெற்றன. இறைவன் அறுபத்துகான்கு திருவிளை யாடல்களை இயற்றிய மதுரை மிகப் பெரிய தலம் என் பதைத் தமிழ்நாட்டார் கன்கு அறிவார்கள்.

இவ்வாறு சிறப்புப் பெற்ற தலங்கள் பல இருக் தாலும் சைவர்கள் எல்லாத் தலங்களிலும் முதலில் வைத்து எண்ணும் சிறப்பை உடையது சிதம்பரம். அது கோயில் கள் யாவற்றினும் சிறப்புடையது; ஆதலால் வேறு அடை ஒன்றும் இன்றிக் கோயில் என்று வழக்கும் தனிப் பெருமை அதற்கு அமைந்தது. பட்டினத்துப் பிள்ளையார் சிதம்பரத்தைப் பற்றிப் பாடிய நால் ஒன்றுக்கு, கோயில் நான்மணிமாலை' என்ற பெயர் அமைந்திருக் கிறது.* - -

மாணிக்கவாசகப் பெருமான், தில்லையில் நடனமாடும் கூத்தப்பிரானுடைய திருவடியே பல்லுயிருள்ளும் பயில் கின்றது என்று பாடுகிருர். " o சிதம்பரத்திற்குரிய புராணங்களில் உமாபதி சிவாசரியார் இயற்றிய புராணத்திற்கு, கோயிம் புராணம் என்ற பெயர் இருத்தல் இக்கே கினைத்தற்குரியது. : . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/12&oldid=563155" இலிருந்து மீள்விக்கப்பட்டது