பக்கம்:சிற்றம்பலம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சிற்றம்பலம்

தின்பாற் படுத்துவர். மெய்யிலும் மனத்திலும் வரும் நோய்கள், மக்களாலும் விலங்குகளாலும் பறவைகளா லும் வரும் துன்பங்கள் முதலியன ஆத்தியாத்மிகம் என் லும் வகையில் அடங்கும்*

இந்த மூன்று வகையான துன்பங்கள் வந்தாலும் இறைவனுடைய கழலே துணையென்று தொழுபவர் ஆளுடைய பிள்ளையார். 'மழை முதலியவற்ருல் இடர் உண்டானலும், உடம்பு தளர்ந்தாலும், கோய் வந்து தொடர்ந்தாலும் உன்னுடைய திருவடிகளேயே தொழுது கான் பெற்ற துன்பத்திற் கிடத்தலொழிந்து எழுச்சி பெறுவேன்' என்று திருப்பதிகத்தைத் தொடங்குகிருர்,

இடரினும் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனக்ழல் தொழுதுஎழுவேன்.

iஇடர் வந்த காலத்திலும் தளர்ந்தாலும் எனது மிக்க நோய் வந்து தொடர்ந்தாலும் உன்னுடைய கிருவடிகளையே தொழுது எழுச்சி பெறுவேன்.

- இடரினும் . துன்பத்திலும், தளரினும் - தளர்ந்தாலும், தளர் என்பதை முதல்நில்ைத் தொழிற்பெயராக்கித் தளர்விலும் என்று பொருள் கொள்வதும் பொருந்தும்; இடர் என்னும் பெயருக்கு ஏற்ப இதனையும் பெயராக்கும் வழி இது. எனது நோய், உறு நோய் என்று கூட்டவேண்டும். அவரவர்களின் விஜனப்பயத் தால் அவரவரை 5ாடி வருவனவாதாவின் எனது நோய் என்றர். உன. அகரம், பன்மை உருபு கழல் என்பது கழல்கள் என்னும் பொருளையுடையது. கழல் என்பது வீரத்தைப் புலப்படுத்த ஒற்றைக்காலில் அணியும் மணி கட்டிய ஒருவகை அணி; வீர கண்டை அல்லது வீர வெண்டயம் என்றும் சொல்வது உண்டு. அது இங்கே அதனே அணிந்த கிருவடிகளுக்காயிற்று. தொழுது எழுவேன் - தொழுது அப்படித் தொழுததன் விளைவாக என் மனத் தளர்ச்சி நீங்கி எழுவேன்; எழுதல் இங்கே மனத்தின்

  • ஞாளுமீர்தம், 19.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/24&oldid=563167" இலிருந்து மீள்விக்கப்பட்டது