பக்கம்:சிற்றம்பலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கும் அங்கும் 25

பார்க்கின்ற மக்களும் சிவபிரான் அடியார்களாதலின் சைவத் திருக்கோலம் பூண்டு விளங்குகிருர்கள்.

எங்கே பார்த்தாலும் கண்ணில் நல்லதே உறுகின்ற கழுமல வளநகரத்தில் பெருந்தகையாகிய இறைவன் பெண் னிைன் நல்லாளொடும் இருந்த சிறப்பு எத்தகையது! அதை வார்த்தைகளால் எடுத்துச் சொல்லமுடியுமா? மற்ற இடங்க ளெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து ஒழியவும் இத்தலம் அழியாது மிதக்க, இறைவனும் இறைவியும் அதில் இருந்த தோற்றத்தை கினேப்பூட்டும் அதிசயத்தைச் சொல்வதா? வாக்கு மனம் கடந்த பெருமான் எல்லா மக்களும் கண்டு தரிசித்து இன்புறும்பொருட்டு அம்மையும் அப்பனுமாகி எழுந்தருளிய கருணையைச் சொல்வதா? அப்படி எழுங் தருளிய கிலேயை விக்கிரக உருவத்தில் அடியார்கள் வழிபட ஏற்றுக்கொண்ட எளிமையைச் சொல்வதா? அந்தத் திருவுருவங்கள் கண்ணுற் காணும்போதும் பேரளவினே உடையனவாய் இருக்கும் பெருமையைச் சொல்வதா? அந்த உருவங்களில் அமைந்துள்ள எழிலைச் சொல்வதா? அன்பர் களுடைய உள்ளத்தே அன்பு ஊற்றெழச் செய்யும் கவர்ச்சியைச் சொல்வதா? எதைச் சொன்னலும் சொல்லி முடித்த தாகாது. ஆகவே ஞானசம்பந்தர், 'இருந்தவாறு என்னே' என்று பொருள் படும்படி, பெருந்தகை இருந் ததே' என்று பாடுகிருர், தாம் கண்ட காட்சியும் பெற்ற அநுபவமும் இன்னவாறு இருந்தன என்று சொற்களால் சொல்லி அளவு படாமையை எண்ணியே இப்படிச் சொன்னர். தமிழ் விரகராகிய அப் பெருமானுக்கே இயம்ப அரிதெனின் ஏனேயோர்எவ்வாறு சொல்ல இயலும்?

கண்ணின்தல் லஃதுறும் கழுமல வளநகர்ப் பெண்ணின் நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே! (கண்ணில் நல்ல காட்சியே படும் கழுமல வளநகரில் பெண் களுக்குள் கல்லாளாகிய உமாதேவியோடும் பெருந்தகைமை .யுடைய இறைவன் இருந்தவாறு என்னே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/35&oldid=563178" இலிருந்து மீள்விக்கப்பட்டது