பக்கம்:சிற்றம்பலம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிற்றம்பலம்,

அவன் பேர்னபொழுது அரசன் ஆண்டவனேத் தொழுது கொண்டிருந்தான்; "கடவுளே! நான் ஏழை நீ திருவருள் பாலித்து எனக்கு வேண்டிய செல்வத்தைக் கொடு' என்று. அரசன் பிரார்த்தனே செய்துகொண்டிருந்தான். அந்தப் பிரார்த்தனே சாதுவின் காதில் விழுந்தது. இது என்ன ஆச்சரியமாக இருக்கிறது! நமக்குத்தான் பணம் இல்லை. இவனிடம் யாசிக்கலாமென்று வந்தால் இவனும் பிச்சைக் காரணுக அல்லவா இருக்கிருன்? இவனும் ஆண்டவனிடத் தில் யாசகம் செய்துதானே பொருள் பெற்று மற்றவர் களுக்குத் தருகிருன்? அந்தப் பொருளே இவனிடம் பெறு வதைவிட கேரே அந்த ஆண்டவன் காவில் விழுந்தே பெற லாமே என்று அவன் எண்ணம் ஓடியது. அரசனே ஒன்றும் கேட்காமல் போய்விட்டான்.

இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கதையைச் சொல் கிருர். இறைவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்று உறுதியாக கம்பினவர்கள் அவனிடம் தம் குறை களே முறையிட்டால் கன்மை உண்டாகும். மக்களே நம்பிக் காலில் விழுவதைவிடக் கடவுள் காலில் விழுந்து அரற்று வது நல்லது. கடவுளே நம்பினேர் கைவிடப்படார்.

நீங்கள் உங்கள் வெம்மையான வலிய பிணி கெட வேண்டுமானல் ஏடகத்து ஐயனிடம் சென்று அவன் காலில் விழுந்து அரற்றுங்கள். உங்கள் பிணி கெடுவது மாத்திர மன்று, மக்களால் கிடைத்தற்கரிய பெரிய ஊதியம் ஒன் றும் கிடைக்கும்; மோட்சம் எளிதிலே கிடைக்கும்" என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் உபதேசம் செய்கிருர்.

பொய்கைஇன் பொழில்உறு புதுமலர்த் தென்றல்.ஆர் வைகையின் வடகரை மருவிய ஏடகத்து

ஐயனே அடிபணிந்து அரற்றுமின் அடர்தரும் வெய்யவன் பிணிகெட, வீடெளிது ஆகுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/50&oldid=563193" இலிருந்து மீள்விக்கப்பட்டது