பக்கம்:சிற்றம்பலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சிற்றம்பலம்

இனிய தென்றலும் இருக்கும் இடத்தில் நம்முடைய தந்தையாகிய இறைவன் வீற்றிருக்கிருன். தன்னைக் கண்டு வழிபட வருகிறவர்கள் இளைப்பாறி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் இந்த அருமையான இடத்தில் திருக்கோயில் கொண்டிருக்கிருன். உமாதேவியாகிய நம் அன்னேயுடன் இங்கே அவன் எழுந்தருளி யிருக்கும்போது இந்தத் தலத்தின் பெருமை மேன்மேலும் வளர்வது ஆச்சரியம் அன்றே? வளங்கள் மல்கிய காளத்தி என்ற புகழ் இத்தலத் துக்கு உண்டாகிவிடுகிறது.

இந்த அழகிய கிலேக்களத்தில் இறைவனேக் கண்டு விட்டால் அவனுடைய திருக்கோலம் அடியார்கள் உள்ளத் தில் கன்ருகப் பதிந்துவிடும். அவனுடைய திருவுருவத்தில் அடியார்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவை அவ னுடைய இரண்டு திருவடிகள். ஆதலின் மற்ற உறுப்புக் களேவிடத் திருவடிகளே அடியார்களுக்குச் சிறந்தவை. இறைவனுடைய திருக்கோலத்தை உள்ளத்தே பதித்துக் கொண்ட அடியார்கள் அவன் திருவடிகளே என்றும் மறக்க மாட்டார்கள். ஒர் ஊருக்குச்சென்று அங்குள்ள பல காட்சி களைக் கண்டு நினைவில் வைத்திருந்தாலும் தாம் நல்ல விருந்துண்ட இடத்தைப் பின்னும் அழுத்தமாக உள்ளத் தில் கினேப்பது மக்கள் இயல்பு. மற்றக் காட்சிகள் மெல்ல மெல்ல மறந்து போனலும் தாம் இன்பம் பெற்ற இடத்தை எளிதில் மறக்க வொண்துை. х ~ - இறைவனுடைய திருக்கோலத்தில் என்றும் மறக்க ஒண்ணுதவை அவனுடைய திருவடிகளே; பலபல திருவுரு வங்களே உடைய கடவுளுக்கு வெவ்வேறு கோலங்கள் உண்டு. முகங்கள் பல இருக்கும். திருக்கரங்கள் பல இருக் கும். ஆனல் எந்தத் திருக்கோலத்திலும் ம்ாருமல் இருப் பவை இரண்டு திருவடிகளே. அவற்றைப் பற்றிக்கொண் டவர்கள் ஏமாந்துபோக மாட்டார்கள். இறைவன் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/54&oldid=563197" இலிருந்து மீள்விக்கப்பட்டது