பக்கம்:சிற்றம்பலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணேயடி 4ல்

வேடம் போட்டாலும் அந்த வேடத்தை மாத்திரம் கண்டு மயங்குபவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டாகலாம். தம் வணக்கத்துக் குரிய கடவுளே வேறு உருவத்தில் இருக்கிருன் என்ற உண்மை தெரியாமற் போகலாம். ஆனல் அடியைப் பற்றியஅன்பர்களுக்கு இந்த வேறுபாடே தோன்ருது. அடி பற்றினல் உண்மை வெளிப்பட்டுவிடும்.

இறைவனுடைய திருவுருவம் அனேத்தையும் கினேந்து வழிபடுவது எளிதன்று. அவற்றைக் கண்டு களித் தாலும் நாளடைவில் மறந்து போகும். ஆனல் அவன் திருவடிகளைப் பற்றிக்கொண்டால் அவை உள்ளத் திலே ஆழப் பதியும். அவற்றை எளிதில் மறக்க வொண்ணுது. .

இந்த விரகறிந்தே அன்பர்கள் இறைவனுடைய அடி களைப் பற்றி அடியார்கள் ஆயினர். யாவருக்கும் பொது வாகிய மறையை உணர்த்தவந்த திருவள்ளுவரும், கடவுள் வாழ்த்தில் ஏழு பாடல்களில் இறைவன் அடியைப் பற்று தலே வற்புறுத்திச் சொன்னர். அவன் திருக்கோலத்தைச் சொல்லாமல், "வாலறிவன் கற்ருள்', 'மலர்மிசை ஏகினன்

மாணடி', 'வேண்டுதல் வேண்டாமை யிலான் அடி', 'தனக்குவமை இல்லாதான் தாள்', 'அறவாழி யந்தனன் தாள்', 'எண்குணத்தான் தாள்', 'இறைவன் அடி"

என்று திருவடியையே எடுத்துரைத்தார். அடிபற்றுதல் எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான நெறி; அன்பர் அனைவருக்கும் எளிதான நெறி பக்தர்கள் உண்மையான பயனே அடையும் நெறி. -

திருக்காளத்தி மலையின் அடிவாரத்தில் குறுமலர் மனக்கும் பொழிலினிடையே முகலி யாற்றங்கரையில் உமாதேவியாரோடு எங்தையாகிய இறைவன் அழகொழுக வீற்றிருக்கும் திருக்கோலம் மிக அழகியதுதான். இவற். றைக் கண்ணுரக் காணும்போது உள்ளத்தில் மலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/55&oldid=563198" இலிருந்து மீள்விக்கப்பட்டது