பக்கம்:சிற்றம்பலம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5S சிற்றம்பலம்

அறத்தின் உருவமாகிய விடை சில சமயங்களில் சினமுடையதாகத் தோற்றும். கடுமையான கோபம் உடையதாக இருக்கும்; காய் சினத்தை உடைய விடை என்று சொல்லும்படியாக, அன்பில்லாரிடத்து அது இருக்கும். அதன் சினத்தை அன்பில்லார் உணர்வார்கள். இறைவன் கல்லோருக்கு நல்கும் தன்மையினனுக இருப்ப தோடு அல்லோர்பால் காய்சினம் காட்டும் விடையை உடையவனுகவும் விளங்குகிருன்.

காய்சி னத்த விடையார்,

★ - திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன காதரைத் தரிசித்தபோது சம்பந்தப் பெருமானுக்கு இந்த எண்ணங்கள் தோன்றின. இறைவன் இயல்பும், அவன் ஏறும் விடையின் இயல்பும், அவனுடைய தொண்டர்கள் எல்லா கலங்கள் பெறுதலேயும், அல்லாதார் துன்புறு தலையும் கினைப்பூட்டின.

இறைவன் பலபல திருமேனியை உடையவன். அவன் செஞ்சோதிப் பிழம்பாக கிற்பவன். எரியும் நெருப்புப் போன்ற வண்ணமுடையவனாகவும் நிற்பான். எரியும் எரி வண்ணம் ஈசனது வண்ணம் என்பதில் ஒர் உண்மை அடங்கி யிருக்கிறது. அவன் சிவந்த திருமேனி படைத்தவன்; நீறு பூ சி யி ரு ப் பவ ன், நீறு பூத்த .ெ ரு ப் பு ப் போல. எரி தன்னைத் தக்கவண்ணம்பயன்படுத்தும் அறிஞர் களுக்கு உணவு சமைக்கவும், வெங்ர்ே வைக்கவும், வெண்டாத அழுக்குப் பொருளைக் கொளுத்தவும், குளிரைப்போக்கிக் கொள்ளவும், இருட்டைப் போக்கவும் துணையாகிறது. அதனல் எரிபட்டு அழிவாரும் உண்டு. அன்பர்கள் இறைவனுடைய அருளாற் பயன் அடை கிருர்கள். அல்லாதார். அவனுடைய அருள் பெருமல் துன்பம் அடைகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/68&oldid=563211" இலிருந்து மீள்விக்கப்பட்டது