பக்கம்:சிற்றம்பலம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவைந்தெழுத்து 63

கிறது; அமைதியான அந்தக் கடலிலே திருநாமத்தின் கினை வாகிய அலே எழுகிறது. அந்த அலை அங்கிருந்து மெல்ல மெல்லக் கண்ணுக்கு வந்து நீர் மல்கச் செய்கிறது. பிறகு நாவுக்கு வந்து கினைப்பளவில் இருந்ததை உரையளவாக்கி ஒதச் செய்கிறது.

அப்படிக் காதலோடும் கசிவோடும் கண்ணிரோடும் ஒதுவதனால் அன்பர்களுக்கு நல்ல பயன் கிட்டுகிறது. கல்ல

நெறியிலே அந்தத் திருகாமம் அவர்களேச் செலுத்துகிறது.

காத லாகிக் கசிந்துகண் ணிர்மல்கி

ஒது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது.

(அன்பு மிக்கவராகி நெஞ்சு நெகிழ்ந்து கண்ணிர் பெருகி காவில்ை ஒதுகின்றவர்களை நல்ல நெறியாகிய முத்திக்குச் செலுத்துவது-நமச்சிவாய என்னும் கிருநாமம் என்று சொல்ல வருகிறர்.

காதல் - அன்பு. கசிந்து - நெகிழ்ந்து, மல்கி-பெருகி, நன் னெறி நல்ல வழி; என்றது. இங்கே முக்கியை. உய்ப்பது - செலுத்துவது.)

இறைவனுடைய திருகாமங்கள் யாவும் ஒதுவாருக்கு நல்ல பயன் தருவனவே. ஆயினும் அவற்றுள்ளே நாம் மாகவும் மந்திரமாகவும் ஒதப் பெறுவது. ஒன்று உண்டு. அதுவே நமசிவாய என்ற திருவைந்தெழுத்து. அதனே ஒதினால் முத்தி பெறலாம். மந்திரம் என்ற வட சொல்லுக்குத் தன்னே நினைப்பாரைப் பாசத்தினின்றும் நீக்குவது என்று பொருள் கூறுவர். மந்திரங்கள் பலவான லும் பஞ்சாட்சர மந்திரம் அவற்றிலெல்லாம் சிறந்தது. வேதங்கள் நான்கு. அவற்றில் அதர்வணமென்றது ஏனைய மூன்று மறைகளிலும் உள்ள மந்திரங்களைத் தொகுத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/73&oldid=563216" இலிருந்து மீள்விக்கப்பட்டது