பக்கம்:சிற்றம்பலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதிக்க வேண்டாம் 71

துண்ணிய அறிவினல் சோதிக்கச் சோதிக்கப் பல உண்மைகள் அறிவாளிகளுக்கு விள்ங்குகின்றன. மனித னேச் சோதித்து அவனுடைய இயல்புகளையும் ஆற்றலையும், விலங்குகளைச் சோதித்து அவற்றின் இயல்புகளேயும், மக்கள் சென்று உலாவுவதற்கரிய இடங்களுக்குச் சென்று சோதித்து அங்குள்ள தட்ப வெட்ப நிலைகளையும், பஞ்ச பூதங்களேச் சோதித்து அவற்றின் தன்மைகளையும் அறி வாளர்கள் உணர்கிரு.ர்கள். விஞ்ஞான சோதனைகளில் ஈடுபட்டவர் அவ்வப்போது கண்டுபிடித்து அறியும் உண்மைகள் அதிசயிக்கத் தக்கனவாக இருக்கின்றன. விஞ்ஞானிகளுடைய ஆற்றலைப் பார்த்தால் அவர்களுடைய சோதனையால் தெளிவுபடாதனவே இல்லை யென்று தோன்றுகிறது. கடல் ஏன் நீலமாக இருக்கிறது? விஞ்ஞானிகள் ஆராய்ந்து காரணம் கூறுகிருர்கள். காமாலைக் கண்ணனுக்குப் பார்ப்பன வெல்லாம் ஏன் மஞ்சளாகத் தோன்றுகின்றன ? விஞ்ஞானிகள் மிக எளிதில் விடை சொல்லிவிடுவார்கள். மனித இருதயம் எப்படி இயங்குகிறது? பள்ளிக்கூடத்துப் பிள்ளைகூட விடை சொல்லும்படி விஞ்ஞானிகள் புத்தகம் எழுதி யிருக்கிரு.ர்கள். -

ஆனல் இந்தப் பிரபஞ்சங்களுக்கெல்லாம் மூலகாரண கை இருக்கும் இறைவன் எப்படி இருப்பான் அவனேக் கண்டு பிடித்து அவனுடைய அருளைப் பெறுவது எவ்வாறு?-இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை சொல்வதில்லை; சொல்லவும் இயலாது. சிறந்த விஞ்ஞானி தன் அறிவாற்றலால் பலவற்றைக் கண்டுபிடித்த பிறகும், இன்னும் தன் அறிவுக்கு எட்டாத பல உண்மைகள் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிருன், இறைவன் இருக் கிருன் என்பதை அதுமானத்தால் சொல்லத் தெரியுமன்றி அவனுடைய இயல்புகளேயோ, செயல்களையோ காரணங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/81&oldid=563224" இலிருந்து மீள்விக்கப்பட்டது