பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

யும் உத்தம பெண்ணிற்கு இருக்க வேண்டிய நல்ல இயல்புகள் அவளிடம் பொருந்தி இருத்தலையும் தக்கவர் மூலமாகக் கேள்வியுற்றான்; அக்குனவதியையே தன் வாழ்க்கைத் துணைவியாகக் கொள்வது நல்லது என்று எண்ணினான்.

திருமணம்

பெற்றோர் இவ்விருவர் கருத்துக்களையும் குறிப்பாக உணர்ந்தனர்; அவர்கள் விருப்பப்படியே மணம் செய்ய முடிவு செய்தனர்; மணத்திற்கு உரிய நல்ல நாளைக் குறிப்பிட்டனர். காவிரிப்பூம் பட்டினத்து வணிகர் வழக்கப்படி, வணிக மகளிர் சிலர் யானைமீது அமர்ந்து சென்று வீடு வீடாகக் கண்டு மணச் செய்தியை ஊரெங்கும் பரப்பினர். மணநேரத்தில் முரச வாத்தியம் ஒலி செய்தது; மத்தளம் அதிர்ந்தது; பணிலம் முதலிய கருவிகள் ஒலித்தன; அரசனது சிறப்பு எழுவது போல வெண் குடைகள் எழுந்தன. மண் ஆர்ப்பு ஊரெங்கும் காணப்பட்டது. மணப்பந்தல் அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வயிரம் பதித்த தூண்களையும் நீலப்பட்டுக் கட்டப்பட்ட கூரையையும் கொண்ட இடத்தில் முத்துப் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அப்பந்தலில் இருந்த ஆசனத்தில் மணமக்கள் வீற்றிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் உற்றாரும் உறவினரும் பெருமகிழ்ச்சியுடன் கூடியிருந்தனர்.

கண்ணகி மணப்பெண் கோலத்தில் விளங்கினாள். அவளது இயற்கை அழகும் ஆடை அணி-


1. இப்புழக்கம் காவிரிப்பூம்பட்டினத்துச் செட்டிமார் மரபினரிடம் இன்றும் இருந்து வருகின்றது.