பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

யில் தங்கி இளைப்பாறினர். அப்பொழுது அங்கு. மறையவன் ஒருவன் பாண்டியனை வாழ்த்திக் கொண்டு வந்தான். அவன் சேர நாட்டவன்; மாங்காடு என்ற ஊரினன்: வேங்கடத்தில் திருமாலைத் தரிசித்துவிட்டுச் சீரங்கம் வந்தான்; அங்கு பெருமாளைச் சேவித்துக் கொண்டு வந்தான். அவன், “இங்குள்ள பாலைநிலத்தைக் கொம்பாளுர் வழியே கடந்து சென்றால், மூன்று வழிகள் செல்வதைக் காண்பீர்கள். வலப்பக்க வழி பாண்டியனது சிறுமலைத் தொடர் வழியாக மதுரைக்குச் செல்லும்; இடப்பக்க வழியில் காடுகள் பலவாகும்; அவற்றைக் கடந்து அழகர் மலைப் பக்கமாகச் சென்றால் மதுரையை அடையலாம்; நடுவழியில் செல்லல் நல்லது; ஆயின் அங்கு ஒரு தெயவம மாறுவேடம் இட்டு வந்து மயக்கும்; எசசரிக்கையாகச் செல்லுங்கள்” என்று கூறி அகன றான்.

தேவதையின் விளையாட்டு

பின்னர் மூவரும் நடுவழியிற் சென்றனர்; கோவலன் தண்ணிர் கொண்டு வரத் தனியே சென்றான், அப்பொழுது அங்கு, மறையவன உரைத்த தெய்வம் வசந்தமாலை வடிவத்தில் தோன்றியது; தோன்றி மாதவியைப் பற்றி கோவலனிடம் பேசியது. கோவலன் உடனே இது தேவதை’ எனபதை எண்ணி, மந்திரம் செபித்தான். அஃது அவ்வளவில் மறைந்தது. பின்னர்க் கோவலன் மற்ற இருவருடன் வழிநடந்து பாலை நிலத் தேவதையாகிய துர்க்கையின் கோயிலை அடைந்தனன்.