பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56


அரசன், “அப்படியா! உனது சிலம்பு மாணிக்கப் பரலை உடையதா? எங்கள சிலம்பு முத்துப் பரலை உடையது அன்றோ? உன் சிலம்பை உடைத்துக் காட்டு, பார்ப்போம்,” என்றான். உடனே கண்ணகி தான் வைத்திருந்த சிலம்பை உடைத்தாள். அதனுள் இருந்த மாணிக்கமணிகள் வெளியே சிதறின. அவற்றுள் ஒன்று அரசே நீ இனிப் பேசுவதில் பயனில்லை; நீ தோற்றனை: வாயை மூடு” என்று சொல்வது போல மன்னவன் வாயில் தெறித்தது.

மன்னவன் மயக்கம்

மன்னவன் பாணிக்க மணிகளைக் கண்டான்: திடுக்கிட்டான். ஆவி சோர்ந்தான்; “ஐயோ பொற் கொல்லன் வாய்மொழியை நம்பிக் குற்றமற்ற இளைஞனைக் கொலை செய்யக் கட்டளையிட்ட நானோ அரசன்! நானே கள்வன், குடிகளைக் கண் னெனக் காத்துவந்த பாண்டியர் மரபுக்கு என் செயலால் கெட்ட பெயர் உண்டாற்றே! எனது ஆயுள் கெடுவதாகுக!” என்று வருந்திக் கூறி அரியணையிலிருந்து மயங்கி வீழ்ந்தான்.

கண்ணகி வஞ்சினம்

அரசன் வீழ்ந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி நிலைகுலைந்து, “உலகில் பெற்றோர் முதலிய உற வினரை இழந்தவர்க்குப் பிறரை அங்ஙனம் காட்டி ஆறுதல் கூறலாம். ஆயின், கணவனை இழந்தோர்க்குக் காட்டத்தக்கபொருள் உலகத்தில் இல்லையே!” என்று கூறி வீழ்ந்த மன்னன் அடிகளைத் தன் கைகளால் பற்றி மூர்ச்சித்தாள்.