பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

(2) மதுரை காண்டம், (3) வஞ்சிக் காண்டம் என்பன. புகார், மதுரை, வஞ்சி என்பன முறையே சோழ-பாண்டிய-சேர நாட்டுத் தலைநகரங்கள் அல்லவா? கண்ணகி பூம்புகாரிற் பிறந்தவள் வளர்ந்தவள். அவள் கோவலனுடன் மதுரையை அடையும் வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதி புகார் காண்டம் எனப்படும்; அவள் மதுரையை அழித்துச் சேரநாடு நோக்கி நடந்த வரை கூறும் பகுதி மதுரைக் காண்டம் எனப்படும்; அவள் வேங்கைமர நிழலில் நின்றது முதல் பத்தினி விழா முடியவுள்ள பகுதி வஞ்சிக் காண்டம் எனப் பெயர் பெறும்.

மூவரசர் பாராட்டு

புகார்க் காண்டத்தின் இறுதியில் சோழ அரசன் சிறப்பு குறிக்கப்பட்டுள்ளது. மதுரைக் காண்டத்தின் இறுதியில் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய வீரம், நீதி முறை முதலியன பேசப்பட்டு இருக்கின்றன. வஞ்சிக் காண்டத்து ஈற்றில் சேர அரசனுடைய குண நலன்கள் பாராட்டப்பட்டுள்ளன.

நூலின் சிறப்பு

கண்ணகி சோழ நாட்டைச் சேர்ந்தவள்; பாண்டி நாட்டில் கணவனை இழந்தவள்; சேர நாட்டில் துறக்கம் புகுந்தவள். அவள் சோழர் தலை நகரமான புகாரில் பிறந்து வளர்ந்தவள்; பாண்டியர் தலைநகரமான மதுரையில கணவனை இழந்தவள்; சேரர் தலைநகருக்கு, அண்மையில் துறக்கம் அடைந்தவள். அவள் பாண்டியனைக் கண்டு வழக்குரைத்து வென்றவள்: சேர அரசனால்