பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீர்ப்படைக்காதையில்

132


“தான் அவர்களை மதுரைக்கு அழைத்து வந்த காரணத்தினால் தானே அவர்களுக்கு அந்த கதி ஏற்பட்டது எனக்கருதி கவுந்தி அடிகள் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டார்கள்” என்றும், கோவலன், கண்ணகி ஆகியோர்களின் தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கதியினைக் கேள்வியுற்று மனம் நொந்து உயிர்விட்டார்கள்” என்றும் “அவர்களின் தந்தையர்கள் துறவறம் மேற்கொண்டார்கள் என்றும், மாதவி மனம் வருந்தி வாழ்க்கையை வெறுத்துத் தனது குழல்களைக் களைந்து துறவியானாள் என்றும் இந்தத் துயரக்கதைகளையெல்லாம் தான் கண்டும் கேட்டும் ஏற்பட்ட கவலைகளையும் பாவங்களையும் போக்க கங்கையில் நீராட வந்திருப்பதாகவும் மாடல மறையோன் சொல்லக் கேட்டுச் சேரனும் வருத்தம் கொண்டான் என்பதையும் இக்காதையின் கதை நிகழ்ச்சிகளில் குறிப்புகள் காண்கிறோம். பாவம் போக்க புனித கங்கையில் நீராடுவதும் சிலைக்கான கல்லிற்கு கங்கை நீர் அபிஷேகம் செய்வதும் இந்து சமய மரபில் வந்துள்ள நடைமுறைகளாகும்.