பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

138


சதுக்க பூதங்களை அமராபதியிலிருந்து வஞ்சி மாநகருக்குக் கொண்டு வந்து சோமயாகத்தினைச் செய்தான் ஒருசேரமன்னன்,

இத்தனை திறம் படைத்த சேர வேந்தர்கள் அனைவருமே இறுதியில் இறந்து பட்டனர். எனவே யாக்கை நிலையாது என்று மாடல மறையோன் எடுத்துக் கூறி, அடுத்து செல்வமும் நிலையானதில்லை இளமையும் நிலையானதில்லை என்றும் எடுத்துக் கூறுகிறான்.

“மிக்கூற்றாளர் யாவரும்இன்மையின் யாக்கை நில்லாதென்பதை யுணர்ந்தோய் மல்லல் மாஞாலத்து வாழ்வோர் மருங்கில் செல்வம் நில்லாதென்பதை வெல்போர்த் தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனையல்லையோ காவல் வேந்தே இளமை நில்லாதென்பதை எடுத்தீங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

மேலும் தொடர்ந்து மாடல மறையோன் பேசுகிறான். சேர மன்னனே, நீயும் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்ந்து விட்டாய், விண்ணோர் உருவில் எய்திய நல்லுயிர், மக்கள் வடிவோடு இவ்வுலகிற்கு மீண்டும் வந்தாலும் வரும். மக்கள் உடலை எடுத்த உயிர் அடுத்த பிறவியில் விலங்கின் வடிவை எடுத்தாலும் எடுக்கும் விலங்குயிர் எடுத்த பிறவி அடுத்து நரக யாக்கையை எடுப்பினும் எடுக்கும். ஆடுகின்ற கூத்தர்களைப் போல் உயிர்கள் பல வடிவங்களையும் எடுக்கும் வேடங்கள் மாறி மாறி வருவது போல வாழ்க்கை நிலையும் பிறவிகளும் மாறிமாறிச் செல்லும்.

நான் உன்னரிடம் பரிசு கேட்டு வரவில்லை. உனது ஆணைச் சக்கரம் மேலும் சிறக்க உனது பெருமை மிக்க உடம்பினைக் கொண்ட உயிரானது ஏனைய உயிர்களைப் போலப் பொதுவான நெறியில் போகாமல் சிறப்பு நெறியில் செல்ல