பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

143


அரசனின் ஆணைப்படி சிறைக் கதவுகள் திறந்துவிடப்படுகின்றன. இறைப் பொருள்கள் வேண்டாம் என அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். வரிவிலக்குச் செய்யப்படுகிறது. என்பதாகும். ஆட்சிப் பொறுப்பில் உள்ள மன்னர் நீதி செலுத்தினால் அல்லாமல் பெரும் புகழ் மகளிரின் கற்புநிலைச் சிறக்காது என்பது பண்டைய தமிழ் நல்லுரையாகும் என்று உணர்ந்து சேர மன்னன், "பார்தொழு நேத்தும் பத்தினிக் கோட்டத்தில்" கோயில் எழுப்ப ஏற்பாடு செய்கிறான்.

"சிறையோர் கோட்டஞ்சீமின் யாங்கணும்
கறை கெழு நல்லூர்க் கறைவீட செய்ம்மென
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை
முழங்கு நீர் வேலி மூதூர் ஏவி,
அருந்திறலரசர் முறை செயினல்லது
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புசிறவாதெனப்

பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை"

என்று காப்பிய வரிகள் குறிப்பிடுகின்றன.

கண்ணகிக்கு சிலை வடித்து கடவுள் மங்கலம் செய்ய ஏற்பாடு செய்யும்படி அரசன் ஆணையிடுகிறான்.

"நந்நாடணைந்து நளிர் சினை வேங்கைப்
பொன்னணி புது நிழல் பொருந்திய நங்கையை
அறக்களத்தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் தம் மொடுஞ் சென்று
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து
இமையவர் உறையும் இமையச் செவ்வரைச்
சிமையச் சென்னித் தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக் கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்து

கடவுள் மங்கலம் செய்கென ஏவினன்"