பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுகற்காதையில்

144


என்று சிலப்பதிகாரக் காப்பியத்தின் நடுகற்காதையின் கவிதை வரிகள் கூறுகின்றன.

பத்தினித் தெய்வமான கண்ணகி சிலையை வடித்து அது பிரதிட்டை செய்யப்பட்ட விவரம் இவ்வரிகளில் விளக்கிக் கூறப்பட்டிருப்பது சிறப்பாகும்.

அறக்களத்து அந்தணர், சோதிடர், சிறப்புடைய சிற்பியர், அழைக்கப்பட்டனர். சிற்ப நூல் உணர்ந்த சிறந்த கம்மியரால் பத்தினிக்கோட்டம் அமைக்கப்பட்டது. அக்கோட்டம் கருநிலை, பகுதி மண்டபம், பெருமண்டபம் ஆகியபால் பெற வகுத்து அமைக்கப்பட்டது. இமையவர் உறையும் இமைய மலையின் உச்சியில் உள்ள இறைவனைப் போற்றி கைத் தொழில் மிகுந்த தெய்வப் படிமத்தின் கண், கைத்தொழில் வல்லான் செய்த சிறந்த அழகிய அணிகலன் முழுதும் அணிந்து அர்ச்சனை செய்து, திசைக் கடவுளர்களை வாசலில் நிறுத்தி, வேள்வியும் விழாவும் நாள்தோறும் நடக்கச் செய்து கடவுள் மங்கலம் (பிரதிட்டை) செய்ய சேரன் செங்குட்டுவன் தக்க ஏற்பாடுகளைச் செய்தான் என்று சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் மிக விரிவாக நயம்பட எடுத்துக் கூறுகிறது.