பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோற்றுவாய்

14


களும் போற்றுகின்றனர் என்னும் பேருண்மையை நமது சாத்திரங்கள் வழியில் சிலப்பதிகாரக் காப்பியம் எடுத்துக் கூறுகிறது.

மூன்றாவதாக ஊழ்வினை உகுத்து வந்து ஊட்டும் என்னும் கருத்தை இக்காப்பியம் மிகவும் வலுவாக எடுத்துக் கூறுகிறது. ஊழ்வினையெல்லாம் விதி வழியென்றும் விதி வலியென்றும் நமது சாத்திரங்கள் பல கதைகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளன.

முன் செய்த தீவினைகளின் பலன் அடுத்த காலத்தில் வந்தே தீரும் என்னும் எச்சரிக்கை மனித வாழ்க்கைக்குத் தேவைப்படுகிறது. அதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை. நேற்றைய நல்வினை தீவினைகளின் பலன் இன்றும், இன்றைய நல்வினை தீவினைகளின் பலன் நாளையும் விளையும் என்னும் உண்மையை நமது சாத்திரக்கதைகள் பலவற்றில் காண்கிறோம்.

இராமன் காட்டிற்குச் சென்றதும், சீதை அசோக வனத்தில் சிறைப்பட்டதும் விதியின் பிழையென கம்பன் கூறுகிறார்.

இராமனுக்குப்பட்டமில்லை, அதைவிடுத்துக் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது அரசன் ஆனை என்பதைக் கேள்விப்பட்டு இலக்குவன் வெகுண்டெழுந்தான் தம்பியை அதிைப்படுத்துவதற்காக இராமன் கூறுகிறான்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த

விதியின் பிழை, நீ இதற்கு என்கொல் வெகுண்டது?

என்றான்.

என்பது கம்பனது அழகு மிகுத் தமிழ்க் கவிதை வரிகளாகும்.

காட்டில் சீதையை அரக்கன் துக்கிச் சென்றதாகக் கேள்விப்பட்டு இராமன் கலங்கிக்கதரிய போது “விதியின் தன்மை