பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

23


"கோதகன்ற தொழில்" என்றும் "வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர்" என்றும் "மிஞ்ச நாற்பொருள் வாணிகஞ்செய்வோர்" என்றும் பாரதி கூறுகிறார்.

மூன்றாவதாக :

இல்லறத்தையும், இல்லறத்தின் சிறப்புக் கூறுகளையும் காப்பியம் எடுத்துக் கூறுகிறது.

"வாரொலி கூந்தலைப் பேரியற்கிழத்தி
மறப்பரும் கேண்மை யோடறப் பரிசாரமும்
விருந்து புறந்தரூம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறு பெறக் காண
உரிமைச் சுற்ற மோடொரு தனி புணர்க்க
யாண்டு சில கழிந்தன இற் பெருங் கிழமையிற்

காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென்"

என்பது காப்பிய வரிகளாகும்.

நீண்ட தழைத்த கூந்தலையுடைய இருநிதிக் கிழவன், மனைக்கிழத்தி மறத்தல் அரிய சுற்றந்தழாலோடே அறநெறியாளரை ஓம்பலும்,விருந்தினரைப் பேணுதலுமாகிய இவற்றுடன் கூடிய பெருமையுடைய இல்வாழ்க்கையை நானா விதமான செல்வத்தோடே நடத்திக் கை வந்து உயர்ச்சி பெறுதலைக் காணவேண்டி உரிமைச் சுற்றங்களோடு வேறாக இருக்கச் செய்ய காணத்தக்க சிறப்பினையுடைய கண்ணகிக்குப் பெருமையுடைய இல்லறத்தை நடத்தும் உரிமைப்பாட்டுடன் சில ஆண்டுகள் கழிந்தன என்பது பொருளாகும்.

இதில் இல்லறத்தின் கடமையாக அறப்பரிசாரமும், விருந்தினரைப் பேணுதலும் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. அறப்பரிசாரம் என்பதில் அறவோர்க் களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க் கெதிர்தல் முதலியவை அடங்கும் என விரிவடையும் இக்கருத்தையே கொலைக் களக்காதையில் கண்ணகியின் கூற்றாக "அறவோர்க்க ளித்தலும், அந்தணரோம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்