பக்கம்:சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துக்கள் அ.சினிவாசன்

69


உணவுக்குப்பின் கோவலன் கண்ணகியின் அருகில் அமர்ந்து தான் செய்த தவறுகளை நினைந்து வருந்தி, வருமொழியாளரோடும் வம்பரத்தைய ரோடும் கூடினேன். மற்றவர்களுடைய ஏளனத்திற்குள்ளானேன். நல்லொழுக்- கத்தினைக் கெடுத்தேன். தாய் தந்தையருக்கு சேவை செய்யும் வாய்ப்புகளை இழந்தேன். உனக்கும் தீமை செய்தேன்" என்றெல்லாம் மனம் வருந்திக் கூறுகிறான்.

"வருமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப்புண்டு பொருளுரையாளர்
நச்சுக் கொன்றேற்கும் நன்னெறியுண்டோ
இருமுதுக் குரவரேவலும் பிழைத்தேன்

சிறுமுதுக் குறைவிக்கு சிறுமையும் செய்தேன்"

என்று காப்பிய வரிகள் குறிக்கின்றன.

இவையெல்லாம் மற்றவர்களுக்குப் படிப்பினையாக இருக்கக்கருதி இவ்வரிகள் கூறப்படுவதாக உள்ளது.

இல்லறத்தின் சிறப்பாக அடிகளார் கூறும் கருத்து நமது சமுதாயத்தின் இல்வாழ்க்கை மற்றும் குடும்ப அமைப்புக் கடமைகளின் மரபாகும்.

"அறவோர்க் களித்தும் அந்தணரோம்பலும்,
துறவோர்க்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும்"

இல்லறம் நடத்துவோரின் கடமையாகும் என்பதை சிலப்பதிகாரப் பெருங்காப்பியம் நன்கு உணர்த்துகிறது.

இல்லறத்தில் உள்ளோரின் கடமைகளைப் பற்றி நமது சாத்திரங்களும் அறநூல்களும் மிகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறுகின்றன. வள்ளுவர் தனது அறத்துப் பாலின் முதல் பகுதி