பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 99

இலக்குவனும், அனுமனும் சிறந்த உதாரணங்களாகும். கற்பு நிலை என்பது இருபாலாருக்கும் பொதுவாக வைப்போம் என்று பாரதி உறுதிபடக் கூறுவதைக் காண்கிறோம்.

குடும்ப அமைப்பும் இல்லற முறையும் சீராக அமைந்து சமுதாயத்தில் செயல்படுமானால் நாட்டின் வளமும் நலனும் ஆட்சியும் சீராக அமையும் என்னும் பொருளில் அடிகளார் பேசியுள்ளார்.

கண்ணகி மதுரை மாநகரை எரியூட்டியபோது பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் விட்டு, தியவர்கள் பக்கமே தீ செல்க என்னும் கருத்தில்

"பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர்

ஏவ லுடையேனால் யார்பிழைப்பார் ஈங்கென்னப் பார்ப்பார், அறவோர், பசுப்பத் திணிப்பெண்டிர் மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர்” என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. இது ஒரு முக்கியமான சிறப்பான கருத்தாகப் போற்றப்படுகிறது.

பாண்டிய மன்னனின் சீரிய செங்கோலாட்சியைப் பற்றிக் குறிப்பிடும் காப்பிய அடிகள்

"மறைநா ஒசை யல்லது யாவதும்

மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றும் கோலனும் அல்லன்” என்று குறிப்பிடுகிறது.

மதுரை மாநகரை எரித்த கண்ணகியின் முன்பாக மதுராபதி தோன்றி, அவளுடைய மனத்தை ஆற்றி, அவளுடைய கோபத்தை ஒருவாறு தனிக்கச்செய்து, அவளுக்கு விளைந்த தீங்கு ஊழ்வினையாலானது எனக் கூறிப் பாண்டியர் ஆட்சியின் பெருமைகள் பலவற்றையும் எடுத்துக் கூறுகிறாள்.